புஜாராவின் வேற லெவல் ஆட்டம்.. 3வது சதம் விளாசி அசத்தல்

0
93
Pujara

டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட புஜாரா, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் கப் ஒரு நாள் போட்டியில் நடப்பு சீசனில் மூன்றாவது முறையாக சதம் விளாசி அசத்தியிருக்கிறார். சாதனை மேற்கொள்ள வயது தடை இல்லை என்று பலரும் எடுத்துக்காட்டாக விளங்கி இருக்கின்றனர். அதேபோல் தங்களுக்கு இருக்கும் இயலாமையை உடைத்து சாதித்த வீரர்களும் பலர் இருக்கின்றனர். அண்மையில் கூட இந்திய அணியில் இடம் கிடைக்காத தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

- Advertisement -

தற்போது அதே பாணியில் நட்சத்திர வீரர் புஜாரா பின்பற்றி வருகிறார். டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தி ஒரு நாள் அணி பக்கமே சேர்க்காமல் புஜாராவை பிசிசிஐ வைத்திருந்தது. அண்மையில் டெஸ்ட் அணியில் இருந்தும் புஜாராவை தேர்வு குழு நீக்கியது. ஐபிஎல் தொடரில் கூட கடந்த முறை கிடைத்த வாய்ப்பு இம்முறை கிடைக்கவில்லை. இதனால் புஜாரா இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் போட்டிகளில் சதம் சதமாக விளாசி அசத்தினார்.

இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ராயல் கப் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் புஜாரா அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். 79 பந்துகளில் 107 ரன்களை புஜாரா விளாசி அசத்தினார். இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் சர்ரே அணிக்கு எதிராக 174 ரன்கள் குவித்தார். இதனால் சஸ்சக்ஸ் அணிக்கு நட்சத்திர வீரராக விளங்கி வரும் புஜாரா இன்று மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய புஜாரா 90 பந்துகளில் 132 ரன்கள் அடித்தார். இதில் 20 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். புஜாராவுக்கு துணை நின்ற தொடக்க வீரர் டாம் 189 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சஸ்சக்ஸ் அணி 50 ஓவர் முடிவில் 400 ரன்கள் குவித்துள்ளது. ஒரு நாள் தொடரில் புஜாரா 600 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 100 ரன்கள் மேலாகும். இதன் மூலம் புஜாரா ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் விமர்சனகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -