இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் எதிர்காலத்திற்காக.. ரோகித் சர்மா இந்த தியாகத்தை செய்யணும் – புஜாரா வலியுறுத்தல்

தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய தியாகம் ஒன்றை அணியின் எதிர்காலத்திற்காக செய்ய வேண்டும் என இந்திய வீரர் புஜாரா வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தற்பொழுது தொடர் தற்காலிகமாக சமநிலையில் இருக்கிறது.

நம்பிக்கை தரும் காபா

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் தோல்வி அடையாமல் இருந்து வந்த ஆஸ்திரேலிய அணியை கடந்த டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி கில், புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் வீழ்த்தியது.

எனவே இந்த முறையில் இந்த நம்பிக்கையை எடுத்துக் கொண்டு காபாவுக்கு இந்திய அணி செல்லும். மேலும் தற்போது பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய அணியின் எதிர்காலத்திற்காக அவர் இந்திய பேட்டிங் வரிசையில் ஒரு முக்கிய தியாகத்தை செய்ய வேண்டும் என புஜாரா கூறி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா இதை விட்டுத்தர வேண்டும்

இது குறித்து புஜாரா கருத்து தெரிவிக்கும் பொழுது “ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிராக ரன்கள் எடுக்கவில்லை. மேலும் ஆஸ்திரேலியாவிலும் அவர் சரியாக துவங்கவில்லை. எனவேஅவர் செயல்படுவதற்கு கொஞ்சம் அழுத்தம் இருக்கிறது. ஆனால் அவருடைய ஆட்டம் என்னவென்று அறிந்த அவரைப் போல் ஒருவர் இன்னும் கொஞ்சம் பாசிட்டிவாக இருக்க வேண்டும். அவரது ஃபுட் வொர்க்கில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : ரோகித் கேப்டன்சி மோசம்தான்.. ஆனா அதுக்கு பின்னாடி பும்ரா விஷயமும் இருக்கு – முகமது கைஃப் பேட்டி

“தற்போது அவர் ஸ்டெம்ப் லைன் பந்துகளுக்கு தடுமாறுகிறார். இது அவருக்கு மிகவும் கவலை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. எனவே வலையில் தொடர்ந்து இதற்காக பயிற்சி செய்ய வேண்டும். மேலும் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் ஜெயஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் துவக்க இடத்தில் நன்றாகவே விளையாடுகிறார்கள். மூன்றாவது இடத்தில் கில்லும் நன்றாக விளையாடினார். எனவே தொடர்ந்து இந்த ஜோடியை டாப் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டும். இதனால் ரோகித் சர்மா அணியின் எதிர்காலத்திற்காக தன்னுடைய துவக்க இடத்தை தியாகம் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts