டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு எவ்வளவு? முழு தகவல்கள்!

0
2317
T20wc2022

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கு கொள்கின்றன.

இந்த பதினாறு அணிகளில் 8 அணிகள் நேரடியாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. மற்ற எட்டு அணிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடி, அதில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள், உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளோடு சேர்ந்து 12 அணிகளாக மாறும்.

- Advertisement -

இந்த 12 அணிகளையும் 2 பிரிவாகப் பிரித்து, இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகளை எடுத்து அரையிறுதி போட்டி நடத்தப்பட்டு, அதற்கடுத்து இறுதிப் போட்டியும், அதிலிருந்து டி20 சாம்பியன் அணியையும் தேர்ந்தெடுப்பார்கள். தகுதி சுற்று போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிகிறது. இதற்கடுத்து அக்டோபர் 22ஆம் தேதி டி20 உலக கோப்பையில் முக்கிய ஆட்டங்கள் நடைபெறுகிறது. அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நவம்பர் 13ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

தற்போது உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இறுதிப் போட்டியில் தோற்கும் அணி, அரையிறுதிப் போட்டியில் தோற்கும் அணி, அதற்கு முந்தைய சுற்றுகளில் பங்கு பெறும் அணிகள் இவற்றுக்கெல்லாம் எவ்வளவு பரிசுகள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

டி20 உலகக்கோப்பை பரிசு விபரங்கள் :

- Advertisement -

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பு 13.5 கோடிகள் ஆகும். இறுதி போட்டியில் தோற்ற அணிக்கு இதில் சரிபாதி தொகை பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் தோற்கும் 2 அணிகளுக்கு தலா 4 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 3.2 கோடிகள்.

12 அணிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்து நடத்தப்படும் சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் அணிக்கு 40,000 டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது, இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 32 லட்சங்கள். இந்தச் சுற்றில் மொத்தம் 30 ஆட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் 12 சுற்றில் நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டு மீதி எட்டு அணிகள் தொடரை விட்டு வெளியேறும். இந்த எட்டு அணிகளுக்கும் தலா 70,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 57 லட்சங்கள்.

இதையடுத்து தகுதி சுற்று போட்டிகள் மொத்தம் 12 போட்டிகள் நடைபெறுகிறது இந்த 12 போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு, ஒரு போட்டிக்கு வெற்றி தொகையாக 40, 000 டாலர்கள் வழங்கப்படுகிறது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 32 லட்சங்கள். இந்தத் தகுதி சுற்றில் எட்டு அணிகளில் நான்கு அணிகள் வெளியேறும், வெளியேறும் ஒவ்வொரு அணிக்கும் 40,000 டாலர்கள் வழங்கப்படும். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு முப்பத்தி இரண்டு லட்சங்கள். இந்த டி20 உலகக் கோப்பையின் மொத்த பரிசுத் தொகை இந்திய ரூபாயின் மதிப்பில் 45.67 கோடிகள் ஆகும்!