லாராவின் சாதனையை நூலிழையில் தவறவிட்ட பிரித்வி ஷா.. ரஞ்சிக்கோப்பையில் 379 ரன்கள் விளாசி புதிய சாதனை!

0
467

ரஞ்சிக்கோப்பை லீக் போட்டியில் 379 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் பிரித்வி ஷா.

நடைபெற்றுவரும் ரஞ்சிக்கோப்பை 2022-23 சீசனில் பல்வேறு பிரிவுகளாக அணிகள் மோதி வருகின்றன. அதில் பி பிரிவில் இடம்பெற்ற மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கிடையே லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

முதல் பேட்டிங் செய்துவரும் மும்பை அணிக்கு 197 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் போனபிறகு, ரஹானே மற்றும் பிரித்வி ஷா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சர்வதேச அனுபவம் பெற்றுள்ளதால், அவர்களது பேட்டிங்கில் அது நன்றாக தெரிந்தது.

3வது விக்கெட்டிற்கு ரஹானே-ஷா ஜோடி, 401 ரன்கள் அடித்து ரஞ்சிக்கோப்பையில் புதிய சாதனை படைத்தது. துவக்க வீரர் பிரித்வி ஷா முச்சதம் அடித்தார். ரஞ்சிக்கோப்பையில் 300 ரன்கள் அடிக்கும் 8வது மும்பை வீரர் ஆவார்.

ரஞ்சிக்கோப்பையில் 1948-49 சீசனில் பி.பி. நிம்பல்கர் என்பவர் 443 ரன்கள் அடித்தார். அதுதான் தற்போதுவரை அதிகபட்சமாக இருந்து வருகிறது.

- Advertisement -

பிரித்வி ஷா, 400 ரன்களை கடந்து புதிய வரலாறு படைத்து, சர்வதேச போட்டிகளில் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டபோது, துரதிஷ்டவசமாக 379 ரன்களுக்கு அவுட்டாகினர். 383 பந்துகள் பிடித்த ஷா, 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கொர் ஆகும். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வரும் இவருக்கு இந்திய அணியில் கடந்த 3 வருடங்களாக இடம் மறுக்கப்பட்டு வருகிறது.