இந்திய கிரிக்கெட்

கொஞ்சம் முன்னே சச்சின் ஸார் பேசினார்.. இத செய்ய சொல்லி இருக்காரு.. ரொம்ப நம்பறார் – பிரித்திவி ஷா தகவல்

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு பிறகு தடம் மாறிய பிரித்திவி ஷா தற்பொழுது சச்சின் டெண்டுல்கர் அறிவுரையின் காரணமாக சரியான பாதைக்கு திரும்பி இருப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் காலத்திற்குப் பிறகு இவர்கள் இருவர் இடத்தையும் ஒரே வீரராக பிரித்திவி ஷா நிரப்புவார் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தார்கள். மேலும் இவருடைய சிறுவயதில் இருந்து சச்சின் டெண்டுல்கர் இவருக்கு நிறைய ஆதரவை வழங்கியிருக்கிறார். இருந்தபோதும் தவறான செயற்கையின் காரணமாக வலி மாறி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்திருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் உடனான தொடர்பு

மும்பை பள்ளி கிரிக்கெட்டில் பிரித்திவி ஷா பெரிய ரன்கள் அடித்து இந்தியா முழுக்க பிரபலமானார். அந்த சமயத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கர் இவரை ஆதரித்து வந்திருக்கிறார். மேலும் இவர் சச்சின் டெண்டுல்கர் மகனுடன் எட்டு வயது முதல் நண்பராக இருந்து வருகிறார். இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் சேர்க்கை சரியில்லாத காரணத்தினால் பிரித்திவி ஷா கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவை சந்தித்திருக்கிறார். மும்பை மாநில அணிக்கு தேர்வு செய்யவில்லை மேலும் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணிகளும் வாங்கவில்லை. ஆனாலும் நம்பிக்கையை கைவிடாது தற்போது சரியான பாதைக்கு திரும்பி விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சச்சின் கூறிய ஆலோசனை

இது குறித்து பேசி இருக்கும் பிரித்திவி ஷா கூறும் பொழுது “சச்சின் சார் என்னுடைய பயணத்தை அறிவார். நானும் அர்ஜுன் டெண்டுல்கரும் 8 முதல் 9 வயதிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம். இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடி வந்திருக்கிறோம். அந்த மாதிரியான காலத்தில் இருந்தே சச்சின் சார் என்னை பார்த்து இருக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்பு கூட அவரிடம் நான் கொஞ்ச நேரம் பேசினேன். அவர் எம்ஐஜி-யில் பயிற்சி செய்ய வந்திருந்தாள். அப்போது நான் அவருடன் பேசினேன். விஷயங்கள் மோசமாகி நீங்கள் விலகிச் செல்லும்போது உங்களுக்குள் தீப்பொறியை ஏற்றி வைக்க ஒருவர் தேவை”

இதையும் படிங்க : இந்திய பவுலர்கள் என்ன பண்றிங்க.. பும்ராவுக்கு இதை கூட உங்களால் செய்ய முடியாதா? – ஷமி விமர்சனம்

“சச்சின் சார் என்னை இன்னும் நம்புகிறார். நான் உன்னை இன்னும் நம்புகிறேன் அதை தொடர்ந்து செய்வேன் என்று என்னிடம் கூறினார். ஏனென்றால் நான் வளர்வதை அவர் பார்த்து இருக்கிறார். மேலும் அவர் என்னிடம் முன்பு இருந்ததைப் போல மீண்டும் திரும்பி வா சரியான பாதைக்கு வா என்று கூறியிருக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் எல்லாம் சரியாக மாறும். அவர் என்னை நம்புவது எனக்கு பெரிய அர்த்தத்தை தருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by