சுற்றுப்பயணத்துக்கு முன்னரே பேட்டிங்கில் தயாராவது எனக்கு சரி வராது – விராட் கோலி வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்!

0
331
Viratkohli

தற்போது உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் ஒருவர்தான் முதலில் வருகிறார் ; அவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரன் மெஷின் விராட் கோலி!

இலக்கை துரத்துவதிலும், சதங்களை அடிப்பதிலும் மிகப்பெரிய வேகத்தை காட்டிய விராட் கோலி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக பேட்டிங்கில் பாதிக்கப்பட்டார். இது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி கிரிக்கெட் வீரர்கள் இடையே பெரிய விவாத பொருளாக மாறி, ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலிக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்க வேண்டுமா வேண்டாமா என்கிற அளவுக்கு போனது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு வாங்கி சென்ற விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளுடன் ஓரளவுக்குச் செயல்பட்டு, அந்தத் தொடரின் இந்திய அணிக்கு கடைசி போட்டியான ஆப்கானிஸ்தான் அணிவுடனான போட்டியில் அபார சதம் அடித்து மீண்டு வந்தார்.

இதற்குப் பிறகு உள்நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் அவரது சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. ஆனாலும் கூட பழைய விராட் கோலி இன்னும் மீண்டு வரவில்லை கொஞ்சம் எங்கோ குறைகிறது என்ற அளவில் பேச்சுகள் இருந்தது.

அத்தனை பேச்சுகளுக்கும் சந்தேகங்களுக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி உடன் மோதிய போட்டியில் முற்றுப்புள்ளி வைத்தார் விராட் கோலி. இந்திய அணி வெல்ல வாய்ப்பே இல்லாத நிலையில் விராட் கோலியின் அபாரமான ஆட்டம் இந்திய அணியை வெல்ல வைத்து, தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை நல்ல நிலைமையில் வைத்திருக்கிறது.

- Advertisement -

தற்போது விராட் கோலி ஒரு பேட்டியில் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் பேசும் பொழுது ” கிரிக்கெட் இங்க ஒரு மன விளையாட்டு. நீங்கள் வேகம் மற்றும் பவுன்சில் கவனம் செலுத்தி பயிற்சி செய்யும் பொழுது, நீங்கள் பவுன்ஸ் குறித்து உணர ஆரம்பிக்கிறீர்கள். சிறிது நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய அட்ஜஸ்ட்மென்ட் உங்களுக்குப் புரிகிறது. இப்படித்தான் எல்லாமே. அதனால் ஒரு சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன்னால் வலை பயிற்சி செய்து தயாராவது எனக்கு நம்பிக்கை இல்லை. அதேபோல் நான் பழைய எந்த வீடியோக்களையும் பெரிதாகப் பார்த்து தயாராக மாட்டேன். சுற்றுப்பயணத்தில் பயிற்சிகள் செய்வதிலிருந்து நான் அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு என் பேட்டிங்கை மாற்றிக் கொள்வேன் ” என்று தன் பேட்டிங் பாணியை மாற்றியமைப்பது குறித்து விராட் கோலி கூறியிருக்கிறார்!