2022 டி20 உலகக் கோப்பையில் இடம்பெறவுள்ள இந்திய வீரர்கள் கணிப்பு

0
18455
Rohit Sharma T20WC 2022

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் ஆரம்பித்து பல எதிர்பாராத திருப்பங்களோடு, பெரிய அணிகள் அடிவாங்க, புதிய அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்த, இளம் வீரர்கள் சாதிக்க, நட்சத்திர இந்திய வீரர்கள் தடுமாற அப்படியென்று களைக்கட்ட ஆரம்பித்திருக்கிறது.

யு.ஏ.இ-யில் கடந்த ட்வென்ட்டி ட்வென்ட்டி உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்றதில்லாமல், முதல் சுற்றோடு வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்ததோடு, பெரிய விமர்சனங்களையும் உருவாக்கி இருந்தது. காரணம் இந்திய அணி நிறைய நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய, கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்பட்டது!

இந்த நிலையில் தற்போது இந்திய வீரர்கள் இருக்கும் பார்மை வைத்து, ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ட்வென்ட்டி ட்வென்ட்டி உலகக்கோப்பைக்கு, இந்திய கிரிக்கெட் அணி யாரை தேர்வு செய்வார்கள், யாரையெல்லாம் தேர்வு செய்வது சரியாக இருக்குமென்று, நமது தேர்வில் பதினைந்து வீரர்கள்.

ஓபனர்கள்

ரோகித் – ராகுல் – இஷான்

மிடில் ஆர்டர்

விராட் கோலி – சூர்யகுமார்- ஸ்ரேயாஷ்

விக்கெட் கீப்பர்

ரிஷாப் பண்ட்

ஆல் ரவுண்டர்கள்

ஜடேஜா – ஹர்திக் பாண்ட்யா

ஸ்பின்னர்கள்

சாஹல் – பிஷ்னோய்

வேகப்பந்து வீச்சாளர்கள்

பும்ரா – பிரசித் கிருஷ்ணா – ஹர்சல் – ஷமி

ப்ளேயிங் லெவன்

ரோகித் – ராகுல். இஷான் கிஷன் மாற்று துவக்க ஆட்டக்காரராக இருப்பார்.

விராட் கோலி – சூர்யகுமார். இவர்கள் இருவர் ஆட முடியாத ஆட்டங்களில் ஸ்ரேயாஷ்.

ரிஷாப் பண்ட் – ஹர்திக்- ஜடேஜா

சாஹல் – ஸ்பின்னர். சாஹல் இல்லையென்றால் பிஷ்னோய்.

பும்ரா – ஹர்சல் – பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலியாவின் ஸீம் & பவுன்ஸ் ஆடுகளங்களுக்கு பிரசித் போன்ற ஹிட் த டெக் பவுலர் ஒருவர் இருப்பது நல்லது.

ஹர்சலோடு பேட்டிங் டெப்த் நம்பர் 8 வரை இருக்கும்.
ஹர்திக்கோடு நான்கு பாஸ்ட் பவுலர்கள் இருப்பார்கள்.
பும்ரா-பிரசித்-ஹர்திக் பவர்-ப்ளேவை கவனித்தால்,
மிடில் ஓவர்களை ஜடேஜா-சாஹல் ஹர்திக்-ஹர்சல் நால்வரும் கவனிக்க,
டெத் ஓவர்களில் பும்ரா வர ஹர்சலும் இணைந்துகொள்வார்.
ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்களில் சாஹலோடு ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்கள் இருப்பார்கள். சாஹலுக்கு அடுத்த தேர்வு தேர்வு பிஷ்னோய்.
ரிஷாப் பண்ட்டோடு, ராகுல் என இரண்டு விக்கெட் கீப்பர்களும் இருப்பார்கள்.
ப்ளேயிங் லெவனில் சூர்யகுமார் இல்லை ஸ்ரேயாஷ் இருந்தால், பார்ட்-டைம் ஆப்-ஸ்பின் வீசுவார்கள்!

இதுவே வருகின்ற ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கான நமது உத்தேச இந்திய அணி!