சஞ்சு சாம்சன் உள்ளே இஷான் கிஷன் வெளியே.. இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

0
17017

இலங்கை அணி உடன் நடக்கும் ஒருநாள் தொடருக்கான உத்தேச இந்திய அணி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

வங்கதேச அணிவுடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிவடைந்துவிட்டது. இதில் இந்திய அணி 1-2 என்று கணக்கில் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 14ம் தேதி பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடர் துவங்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு இந்தியாவிற்கு திரும்பும் இந்திய அணி, மூன்று டி20 போட்டிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது. போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் வீரர்கள் பட்டியல் முடிவாகவில்லை. இந்திய அணியின் உத்தேச பட்டியலை நாம் காண்போம்.

காயம் காரணமாக வெளியில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா தற்போது குணமடைந்து வருகிறார். இலங்கை தொடரில் அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டார். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவார் என்பதால் அவரும் இந்த ஒருநாள் தொடரில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றாலும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். வங்கதேச தொடரில் அவர் எடுக்கப்படவே இல்லை. ஆகையால் நிச்சயம் இலங்கை அணியுடன் நடக்கும் தொடரில் அவர் இடம் பிடிப்பார்.

- Advertisement -

வங்கதேச அணியுடன் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான். ஏனெனில் ஒரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார். அதுவும் ரோகித் சர்மாவின் இடத்தில். அணியின் கேப்டனான அவர் மீண்டும் வந்துவிட்டால், இஷான் கிஷன் வெளியில் இருப்பது தான் சரியாக இருக்கும்.

இலங்கை அணி உடன் நடக்கும் ஒரு நாள் தொடருக்கான உத்தேச இந்திய அணி

ஷிகர் தவான், சுப்மன் கில், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், தீபக் சாஹர்.

காத்திருப்பு பட்டியல்

முகமது ஷமி, குல்தீப் சென், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், அர்ஷ்தீப் சிங்.