மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கேவின் வலுவான லெவன்

0
1441
Bravo and Gowtham

பாதியில் நின்ற ஐபிஎல் தொடர் மறுபடியும் இந்த ஆண்டு இறுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து அதிகாரப்பூர்வ தனது சமூக வலைத்தளத்தில் பிசிசிஐ சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது.

ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இங்கிலாந்து, நியூசிலாந்த் மற்றும் பங்களாதேஷ் அணிகள் உள்ள வீரர்கள் மீதும் உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்.

இதனால் ஒரு சில வீரர்கள் சென்னை அணியில் விளையாட முடியாமல் போகும். எனவே நடக்க இருக்கின்ற மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கேவின் வலுவான லெவன்-யை பார்ப்போம்.

ஓபனிங் வீரர்களாக ருத்ராஜ் மற்றும் டு பிலஸ்ஸிஸ்

இவர்கள் இருவரும் நிச்சயமாக இது முறை ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு துவக்கத்தில் விளையாடியதை போல் விளையாடுவார்கள். குறிப்பாக இவர்களது ஓபனிங் பார்ட்னர்ஷிப் சென்னை அணி வெற்றி பெற்ற போட்டிகளில் அனைத்திலும் அதிகளவில் காணப்பட்டது.

குறிப்பாக டுப்லஸ்ஸிஸ் 7 போட்டிகளில் விளையாடி 320 ரன்கள் குவித்து இருந்தார். அவரது பேட்டிங் அவரேஜ் 64 என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் ருத்ராஜ் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும் அதற்கு அடுத்து மிக சிறப்பாக விளையாடினார். முதல் மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடி அதன் பின்னர் கடைசி நாள் போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் குவித்தார். எனவே இவர்கள் இருவரும் வழக்கம்போல ஓப்பனிங் வீரர்களாக களம் இறங்குவார்கள்.

மிடில் ஆர்டர் வரிசையில் சுரேஷ் ரெய்னா அம்பதி ராயுடு மற்றும் மகேந்திர சிங் தோனி

சென்னை அணியில் 3-வது வீரராக மொயின் அலி விளையாடி வந்தார். ஆனால் அவரால் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது. எனவே சுரேஷ் ரெய்னா பழையபடி மூன்றாவது இடத்தில் வந்து விளையாடுவார். அவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு நான்காவது இடத்தில் இறங்கி விளையாடுவார். இவர்கள் இருவரும் பல போட்டிகளில் இணைந்து மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். எனவே இவர்களது பார்ட்னர்ஷிப் சென்னை அணிக்கு மிக பெரிய அளவில் உதவும்.

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் 7 போட்டிகளில் அவ்வளவாக மகேந்திர சிங் தோனி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. ஆனால் தற்பொழுது சென்னை அணிக்கு பேட்டிங் தேவைப்படும் நேரத்தில் மகேந்திர சிங் தோனி வழக்கம்போல சற்று மேலே இறங்கி விளையாட வேண்டும். அதன்படி பார்க்கையில் தோனி ஐந்தாவது இடத்தில் இறங்கி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்ரவுண்டர் வீரர்களாக ரவீந்திர ஜடேஜா டுவைன் பிராவோ மற்றும் கிருஷ்ணப்ப கௌதம்

சாம் கரன் இல்லாத இடத்தை ரவீந்திர ஜடேஜா தான் நிரப்பியாக வேண்டும். எனவே அவர் ஆறாவது இடத்தில் வந்து பேட்டிங் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பிராவோ மற்றும் கௌதம் ஆகிய இருவருக்கும் இனி வரும் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இவர்கள் இருவரும் மிக சிறப்பாக பந்து வீசி அதேசமயம் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் இறங்கி பேட்டிங் விளையாடுவார்கள். எனவே இவர்களது சேர்க்கை நிச்சயமாக சென்னை அணியில் இருக்கும் என நம்பலாம்.

தீபக் சஹர், லுங்கி எங்கடி மற்றும் இம்ரான் தாகிர்

பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் எப்பொழுதும் போல தீபக் சஹர் அணியில் இடம் பெற்று இருப்பார். சென்னை அணிக்கு பல போட்டிகளில் திருப்புமுனையை ஏற்படுத்தி திருமுறை பந்துவீச்சாளர் அவர் மட்டுமே.

மற்ற இரு பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் லுங்கி எங்கடி நிச்சயமாக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். நல்ல வேகத்தில் வந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர் அவர் என்பதால் நிச்சயமாக அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி பந்து வீச்சாளராக இம்ரான் தாகிர் விளையாடுவார் என நாம் எதிர்பார்க்கலாம். இம்ரான் தாஹிர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிக சிறப்பாக பந்து வீச கூடிய ஒரு வீரர். எனவே அவரது வருகை சென்னை அணிக்கு சற்று பலத்தை அதிகரிக்கும்.