இந்திய கிரிக்கெட்

35 ஓவர் 225 ரன் கொடுத்துட்டேன்.. நான் சரியா பண்ணல.. ஆனா அடுத்த இத செய்வேன் – பிரசித் கிருஷ்ணா உறுதி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சரியான மீட்டரில் தான் பந்து வீசவில்லை என்றும், ஆனால் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்ததாகவும், இருந்தபோதிலும் இதற்கு பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 35 ஓவர்கள் பந்து வீசி 220 ரன் கொடுத்திருக்கிறார். ஒரு ஓவருக்கு 6 ரன்னுக்கும் அதிகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் கூட இது மோசமான பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.

நான் சரியாக செய்யவில்லை

இதுகுறித்து பிரசித் கிருஷ்ணா கூறும் பொழுது ” முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் பொறுத்த வரையில் நான் விரும்பிய இடத்தில் பந்து வீசவில்லை. ஆறு முதல் எட்டு மீட்டர் லென்த்தில் நான் வீசி இருக்க வேண்டும். நான் இதை சரியாக செய்யவில்லை. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் கொஞ்சம் வேகம் குறைந்தது சாதகமாக இருந்தது. எனவே நான் எட்டு மீட்டருக்கு பின்னால் இருந்தேன். மேலும் விக்கெட் எடுப்பதற்காக மட்டுமே மேலே வீசினேன். ஆனால் நான் நிச்சயமாக விரும்பிய லென்த்தை வீசவில்லை”

“எனக்கு அந்தப் பக்கமாக சாய்ந்து கொள்வதில் கொஞ்சம் பழகுவதற்கு நேரம் பிடித்தது. ஆனால் இதில் சாக்குப் போக்கு எதுவும் சொல்ல முடியாது. ஒரு தொழில் முறை வீரராக நான் சரியான முறையில் செயல்பட்டு இருக்க வேண்டும். நான் இதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த முறை சரியாக செய்வேன்”

- Advertisement -

நன்றாக செய்யவே நினைத்தேன்

“நான் ஒவ்வொரு முறை பந்து வீச வரும்பொழுதும் மெய்டன் ஓவர் வீச விரும்பினேன். நான் உண்மையில் பவுண்டரிகளையோ அல்லது வேறு எதையோ கொடுக்க விரும்பவில்லை. மேலும் அவுட்ஃபீல்டு வேகமாக இருந்தது. நான் வீசிய லென்த் பெரும்பாலான நேரத்தில் சரியானதாக இல்லை”

இதையும் படிங்க : கேஎல் ராகுல் ஒருநாள் ராஜாவா?.. இனி அவர் இதை சுமந்துகிட்டு போயே ஆகணும் – மஞ்ச்ரேக்கர் கருத்து

“எனக்கு சில எட்ஜ் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் என்னை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் பந்து வீச வரும் ஒவ்வொரு முறையும் ரன் தராமல் வீசுவதற்கு முயற்சி செய்தேன். என்னால் முடியவில்லை. நிச்சயம் அடுத்த வாய்ப்பில் சரி படுத்திக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by