ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ரன் ரேட்டை உயர்த்திக் கொண்ட இந்திய அணி – அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் ?

0
222
Indian Cricket Team

நேற்று நடந்த உலக கோப்பை தொடர் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி யுற்ற இந்திய அணி இந்த முறை ஆப்கானிஸ்தான் அணியை சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் தனது வெற்றிக் கணக்கை இந்திய அணி தொடங்கியுள்ளது. அடுத்த சுற்றுலா செல்ல வேண்டிய வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டுமானால் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதால் அதையும் இந்திய அணி சிறப்பாக செய்து முடித்துள்ளது.

கடந்த இரு ஆட்டங்களில் ஆரம்பத்தில் ரன் சேர்க்க திணறிய நிலையில் இந்த ஆட்டத்தில் அதிரடியாக அடித்து ரன் சேர்த்தது இந்திய அணி. ராகுல் மற்றும் ரோஹித் என இருவரும் அரைசதம் கடந்தனர். இதனால் இந்திய அணி 210 ரன்கள் குவிக்க ஆப்கானிஸ்தான் அணிக்கு அதுவே பெரிய உளவியல் ரீதியான பின் நோக்கமாக அமைந்தது. அதன்பிறகு அனுபவம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை இந்திய அணி எளிதாக சமாளித்து 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே அந்த அணியை அடிக்க விட்டது. பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்திய அணியின் ரன் ரேட் நல்ல முன்னேற்றம் கண்டது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி வர இருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் இதே போன்ற பெரிய வெற்றிகளை பெற்றாக வேண்டும். இந்திய அணி வெற்றி பெறுவதோடு நில்லாமல் அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டும். நியூசிலாந்து அணி பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வி பெறாமல் குறுகிய ரன் கணக்கில் தோல்வியுற்றால் ஆப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட்டை விட இந்திய அணியின் ரன் ரேட் அதிகமாக இருக்கும். இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளை பின்னுக்கு தள்ளி இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பெறும்.

அரையிறுதிக்கு தகுதி பெற்றால் மிக மோசமான நிலையிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது ரசிகர்களுக்கு மிகவும் ஆனந்தத்தைக் கொடுக்கும். வர இருக்கும் போட்டிகளில் இந்திய அணியின் ஆட்ட நுணுக்கங்கள் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.