நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களமிறங்கவிருக்கும் 11 இந்திய வீரர்கள் – கோஹ்லி, ரோஹித்க்கு ஓய்வு

0
101
Ind vs Nz Test Squad

இந்திய அணியின் டி20 உலக கோப்பை தொடர் எதிர்பாராத வண்ணம் விரைவாகவே முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றியுடன் நாடு திரும்பும் என்று நினைத்த இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றின் முடிவில் நாடு திரும்பி விட்டது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதால் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணி புதிய பயிற்சியாளருக்கு கீழ் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் தொடரை ஆட தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சிறிது நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வீரரான ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என்றும் இரண்டாவது டெஸ்டில் இருந்து கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து தொடரில் தங்களது திறமைகளை நிரூபிக்க தவறிய ரகானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்டுக்கு ரஹானே மற்றும் புஜாரா முறையே கேப்டன் மற்றும் வைஸ் கேப்டனாக செயல்படுவர் என்று பிசிசிஐ அமைப்பு கூறியுள்ளது. இவர்களுடன் கேஎல் ராகுல், கில், மயங்கி, ஸ்ரேயாஸ் என பேட்டிங் வரிசை நீளுகிறது .பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய பரத் விக்கெட் கீப்பராக ஸ்குவாடில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூடவே சீனியர் விக்கெட் கீப்பர் சகா இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ் மற்றும் இஷாந்த் உடன் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ப்ரஷித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஜடேஜா கூட்டணியுடன் அக்ஷர் பட்டேல் மற்றும் ஜெயந்த் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதல் ஆட்டத்தில் ராகுல் மற்றும் மயாங்க் இருவரும் துவக்க வீரர்களாக செயல்படுவார் என்றும் கில் நான்காம் நிலை வீரராக விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக புஜாராவும் ஐந்தாவதாக ரகானேவும் அதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பராக சகா விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுமே அணியில் இடம் பிடிக்கலாம். வேகப்பந்து வீச்சு வேலையை இஷாந்த் மற்றும் உமேஷ் பகிர்ந்து கொள்ளலாம்.

சீனியர் வீரர்கள் இல்லாத இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முதல் டெஸ்ட் ஆடப்போகும் உத்தேச அணி

ராகுல், மயங்க், புஜாரா, கில், ரஹானே, சஹா, அஷ்வின், ஜடேஜா, அக்ஷர், இஷாந்த் மற்றும் உமேஷ்.