நடப்பு ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் சுற்றில் காலடி எடுத்து வைக்க – ஒவ்வொரு அணிகளுக்குமான வழிகள் இவைகள் தான்

0
1869

கடந்த வருடங்களைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடி கொண்டி ருக்கிறது. 60 போட்டிகளை கடந்து வந்த பின்னரும் தற்போதும் தொடரில் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது.தற்போது வரை 10 அணிகளில் ஒரே ஒரு அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி அடைந்து இருக்கிறது. இரண்டு அணிகள் வெளியேறிய நிலையில்,மீதமுள்ள மூன்று இடங்களுக்கு  ஏழு அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

ப்ளே ஆப் சுற்றுக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அந்த 7 அணிகளின் ரசிகர்கள், தங்களுடைய அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடுமா என்கிற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நாளும் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமிருக்கும் அந்த ஏழு அணிகளும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ்

மேலே கூறியது போல குஜராத் அணி நான்கு இடங்களில் ஒரு இடத்தை கைப்பற்றி விட்டது. 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அந்த அணி மீதமிருக்கும் இரண்டு போட்டியில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் முதல் இரண்டு இடங்களில் இத்தொடரை முடிக்கும். குஜராத் அணி முதல் இரண்டு இடத்தில் இத்தொடரை முடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

- Advertisement -

16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த அணி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டாலே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி அடைந்துவிடும். இந்த அணியும் குஜராத் அணியை போல, மற்றொரு போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் முதல் இரண்டு இடங்களில் தொடரை முடிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவதன் மூலமே பிளே ஆப் சுற்றுக்கு சிரமமின்றி தகுதி பெற முடியும். ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துவிட்டால் டெல்லி, பஞ்சாப் அல்லது ஹைதராபாத் அணிக்கு இந்த ஒரு விஷயம் சாதகமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியின் மீதம் இருக்கும் ஒரே ஒரு போட்டியில் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதேபோல டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள், மீதமிருக்கும் இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து விட வேண்டும். மற்றொரு பக்கம் ஹைதராபாத் அணி ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும். இவை எல்லாம் நடக்கும் பட்சத்தில் பெங்களூரு அணி நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

டெல்லி கேப்பிடல்ஸ்

12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் டெல்லி அணி மீதமிருக்கும் இரண்டு போட்டியிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும். அந்த இரண்டு போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பஞ்சாப் அணிக்கான பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு பறிபோய்விடும். அதேபோன்று ஹைதராபாத் அணி, அந்த அணிக்கு மீதமிருக்கும் 3 போட்டியில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் நடைபெறும் பட்சத்தில் டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

பஞ்சாப் கிங்ஸ்

12 புள்ளிகளுடன் புள்ளி போட்டியில் ஆறாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப், மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் ( டெல்லி அணிக்கு எதிராகவும் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் ) வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். மறுபக்கம் டெல்லி அணி மற்றொரு போட்டியிலும் தோல்வி அடைய வேண்டும், அதேபோல ஹைதராபாத் அணி, அந்த அணிக்கு மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் மிகப் பெரிய ரன்ரேட்  வித்தியாசத்தில் வெற்றி பெறாமல் குறைந்த ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் ஐதராபாத் அணி உள்ளது. இந்த அணி மீதமிருக்கும் 3 போட்டிகளும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும். அதேபோல பெங்களூரு அணி அதனுடைய கடைசி போட்டியில் தோல்வி பெறவேண்டும் மறுபக்கம் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் 16 புள்ளிகளை பெறாமல் இருக்க வேண்டும். இந்த விஷயங்கள் நடக்கும் பட்சத்தில் ஹைதராபாத் அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் அந்த அணி மீதமிருக்கும் இரண்டு போட்டியிலும் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதேபோல மறுபக்கம் பெங்களூரு டெல்லி பஞ்சாப் அணிகள், அந்தந்த அணிகளுக்கு மீதம் இருக்கும் எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறக்கூடாது. அதுமட்டுமின்றி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஹைதராபாத் அணி மற்றொரு போட்டியிலும் தோல்வி பெற வேண்டும். இவையெல்லாம் நடைபெறும் பட்சத்தில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் அணியாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரண்டாவது அணியாக தொடரில் இருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.