ஐபிஎல்

சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக விளையாடி ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய 5 ஜாம்பவான் வீரர்கள்

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டது நோக்கமே இளம் வீரர்கள் இதில் நன்றாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்து அதன் பின்னர் சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பதற்காக தான். அப்படி ஒரு சில வீரர்கள் தங்களது முழு திறமையை காண்பித்து அதன் பின்னர் சர்வதேச அளவில் விளையாடியும் இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் சர்வதேச அளவில் விளையாடிய ஜாம்பவான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாட முடியாமல் திணறி இருக்கின்றனர் தற்பொழுது அவர்களைப் பற்றி பார்ப்போம்.

1. ரிக்கி பாண்டிங்

சர்வதேச அளவில் ரிக்கி பாண்டிங் ஒரு ஆகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றுமொரு ஆகச் சிறந்த கேப்டன் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் ஐபிஎல் தொடரில் அவரால் அவ்வளவு சிறப்பாக விளையாட முடியாமல் போனது.

முதலில் கொல்கத்தா அணிக்காக விளையாடி அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு மும்பை அணியை வழிநடத்தி விளையாடினார். மிக சிறப்பாக விளையாட காரணத்தினால், தானாகவே முன்வந்து தனது கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தார். மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடி வெறும் 91 ரன்களை மட்டும்தான் ரிக்கி பாண்டிங் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து தற்போது டெல்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. கிளென் மெக்ராத்

ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு முறை உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக பந்து வீசிய ஒரு ஜாம்பவான் வீரர் கிளென் மெக்ராத். அந்த அளவுக்கு மிக சிறப்பாக விளையாடிய வீரர் ஐபிஎல் தொடர்களில், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவரால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது.

டெல்லி அணிக்காக இவர் முத்தமாக 14 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் அணியில் இருந்த மற்றவர்களை விட மெக்ராத் மிக சுமாராக தான் பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விவிஎஸ் லட்சுமணன்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் அவ்வளவு சிறப்பாக விளையாட முடியாமல் போனது. டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதர் போது அணிக்காக முதல் மூன்று தொடர்களில் விளையாடி அதன் பின்னர் கொசி டஸ்கேர்ஸ் கேரள அணிக்காக விளையாடினார். மொத்தமாக 20 போட்டிகளில் விளையாடி 282 ரன்கள் மட்டுமே அவர் குவித்தார். தற்பொழுது விவிஎஸ் லக்ஷ்மன் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சௌரவ் கங்குலி

இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி அதே சமயம் இந்திய அணியை ஒரு காலத்தில் மிக சிறப்பாக வழிநடத்த இவரால் ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாட முடியவில்லை. கொல்கத்தா அணியில் விளையாட தொடங்கியவர் அதன் பின்னர் சகாரா புனே வாரியர்ஸ் அணியில் விளையாடினார். ஐபிஎல் தொடரில் மொத்தமாக 59 போட்டிகளில் விளையாடி வெறும் 1349 ரன்களை மட்டுமே இவர் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. திலகரத்ன தில்ஷன்

இலங்கை அணிக்காக மிக அற்புதமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரு வீரர்களில் இவரும் ஒருவர். இவ்வளவு ஆட்டம் மீது அதிரடியாக இருக்கும். அதன் காரணமாக டெல்லி நிர்வாகம் இவரை ஆரம்ப காலகட்டத்தில் விளையாட வைத்தது. டெல்லி அணியில் இருந்து அதன் பின்னர் பெங்களூர் அனைத்தும் ஒரு சில துறைகளில் இவர் விளையாடினார்.

ஆனால் இவ்விரு அணிகளிலும் இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. மொத்தமாக 52 போட்டிகளில் விளையாடி 1153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Published by