சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒருமுறைகூட அரைசதம் அடிக்காத 3 இந்திய வீரர்கள்

0
504
Ravindra Jadeja T20I

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். போட்டி மிக சிறிய போட்டி என்பதால் முடிந்தவரை, தங்களுக்கு கிடைத்த பந்துகளில் அதிரடியாக விளையாடி ஸ்கோர் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் விளையாடுவார்கள்.அது ஒரு சில வீரர்கள் குறைந்த பந்துகளில் அரைசதம் குவித்து அசத்துவார்கள்.

ஒரு சில வீரர்கள் சற்று நிதானித்து விளையாடி இறுதிவரை அணிக்காக தங்களால் முடிந்தவரை அரை சதம் அடித்து ரன் குவிப்பார்கள். ஆனால் இந்திய அணியில் விளையாடிய 3 வீரர்கள் இதுவரை சர்வதேச அளவில் ஒரு முறை கூட இந்திய அணிக்காக அரை சதம் அடித்ததில்லை. அவர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.

1. ஹர்திக் பாண்டியா

மும்மை அணியில் மிக அதிரடியாக விளையாடிய ஒரு வீரர் இவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் 87 போட்டிகளில் விளையாடி 1401 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 27.47 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 157.24 ஆகும்.
ஐபிஎல் தொடரில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 91 ஆகும். ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை இவர் அரைசதம் குவித்துள்ளார்.

ஆனால் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக இவர் மிகவும் மோசமாகத்தான் விளையாடி இருக்கிறார். இதுவரை 48 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 474 ரன்கள் குவித்திருக்கிறார். டி20 போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 19.75 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 147.66 ஆகும். இந்திய அணிக்காக விரட்டி அடித்த அதிகபட்ச ஸ்கோர் 42. அதே சமயம் இவர் இந்திய அணிக்காக இதுவரை ஒரு முறை கூட அரைசதம் குவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரவீந்திர ஜடேஜா

மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சென்னை அணிக்கு ரவீந்திர ஜடேஜா மிக முக்கியமான வீரர். ஐபிஎல் தொடர்களில் ரவீந்திர ஜடேஜா மொத்தமாக 196 போட்டிகளில் விளையாடி 2290 ரன்கள் குவித்திருக்கிறார்.இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 62. மேலும் ஐபிஎல் போட்டிகளில் இவரது அவரேஜ் 26.63 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 128.15 ஆகும். ஐபிஎல் தொடரில் இதுவரை 2 முறை அரைசதம் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்திய அணிக்கு விளையாடிய இவர் மொத்தமாக 50 போட்டிகளில் விளையாடி 217 ரன்கள் குவித்திருக்கிறார். சர்வதேச அளவில் இவருடைய பட்டிங் அவரேஜ் 15.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 112 44 ஆகும். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 44 மட்டுமே. அதே சமயம் இந்திய அணிக்காக இவர் ஒருமுறை கூட அரைசதம் குவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடர்களில் மிக சிறப்பாக விளையாடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மொத்தமாக 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3946 ரன்கள் குவித்திருக்கிறார். இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 97 ஆகும். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரையில் இவரது பேட்டிங் அவரேஜ் 26.11 மற்றும் ஸ்ட்ரைக் 128.89 ஆகும். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை மொத்தமாக 19 முறை அரைசதம் குவித்து இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளை விட மிக சிறப்பாக இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் இவர் பங்களித்த நிலையிலும், ஒரு அரைசதம் கூட இவரால் குவிக்க முடியவில்லை. இந்திய அணிக்காக மொத்தமாக 32 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 399 ரன்கள் குவித்திருக்கிறார். இந்திய அணிக்காக சர்வதேச அளவில் விளையாடிய இவரது பேட்டிங் ஆவரேஜ் 33.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 143.53 ஆகும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 48 மட்டுமே.