சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 5 வீரர்கள்

0
334
Shahid Afridi

கிரிக்கெட் போட்டியில் ஒரு சில சமயம் வினோதமான விஷயங்கள் நடக்கும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் வீரர்கள் வந்து விளையாடியதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். குறிப்பாக ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக சர்வதேச அளவில் விளையாடி ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதேபோல சர்வதேச அளவிலும் ஒரு சில வீரர்கள் ஓய்வு பெறப் போவதாக கூறி பின்னர் பின்னாளில் மீண்டும் தங்களது அணிக்காக விளையாடி இருக்கின்றனர். அப்படி ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் தனது அணிக்காக வந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து அணிக்கு கிடைத்த அதிரடியான பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் கூட இவர் மீது அதிரடியாக விளையாடுவார். மொத்தமாக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8181 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 47.3 ஆகும்.

இவர் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார். அதில் டெஸ்ட் போட்டியில் நான் கவனம் செலுத்த இருக்கிறேன், அதன் காரணமாக இனி லிமிடட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போவதில்லை என்று அறிவித்தார். இருப்பினும் சில காலம் கழித்து மீண்டும் இங்கிலாந்து அணிக்காக லிமிட்டட் ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் 13,797 ரன்கள் குவித்து, அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்காக 32 சதங்களும், 67 அரைசதங்களும் குவித்திருக்கிறார். அதேசமயம் சர்வதேச அளவில் 18 விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றி இருக்கிறார். தற்போது அவர் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

4. ஷாஹித் அப்ரிடி

பார்த்தவாறு 96 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்காக விளையாட தொடங்கினார். சிறப்பாக விளையாடிய இவர் 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட தொடங்கினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி கொண்டிருந்தான் பர்டி 2006 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். இருப்பினும் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டியில் வந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.அப்படி 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1716 ரன்கள் மற்றும் 48 விக்கெட்டுகள் குவித்திருக்கிறார். அதே சமயம் ஒரு நாள் போட்டிகளில் 398 போட்டிகளில் விளையாடி 8064 ரன்கள் மற்றும் 395 விக்கெட்டுகள் குவித்திருக்கிறார்.

அதேசமயம் டி20 போட்டியில் விளையாடி கொண்டிருந்த அப்படி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக கூறி, பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினார். மொத்தமாக 99 டி20 போட்டிகளில் விளையாடி 1416 ரன்கள் மற்றும் 98 விக்கெட்டுகள் குவித்திருக்கிறார்.

3. இம்ரான் கான்

1992ஆம் ஆண்டு இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது என்றும் அனைவருக்கும் தெரியும். ஆனால் 1987ஆம் ஆண்டு இவர் உலக கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன் தனது ஓய்வை அறிவித்து விட்டார். அதன் பின்னர் பாகிஸ்தான் பிரசிடெண்ட் அழைப்பை ஏற்று மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தொடங்கினார்.

அதன் பின்னர் 1992ஆம் ஆண்டு சர்வதேச அளவில் தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார். சர்வதேச அளவில் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3807 ரன்கள் குவித்து 362 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேசமயம் 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3709 ரன்கள் குவித்து 182 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக அவர் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. டிவைன் பிராவோ

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த இவர் சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் 2018ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறி இருந்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் நடந்து முடிந்தவுடன் தனது ஓய்வு அறிக்கையை மீண்டும் வாபஸ் வாங்கினார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கூட அவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 தொடரில் நிச்சயமாக இவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

74 டி20 போட்டிகளில் விளையாடி 1157 ரன்கள் குவித்து, அதேசமயம் 62 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

1. ஜாவித் மியாண்டட்

இவரை இந்திய ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். 1986ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரல் – ஆசியா கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தை சிக்சராக அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய ரசிகர்கள் அனைவரின் பார்வையும் இவர் அந்த சிக்சர் மூலம் தவிடுபொடி ஆக்கினார்.

21 ஆண்டு காலம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இவர், 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு முன் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். பின்னர் பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் வந்து 1996 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பாகிஸ்தான் அணிக்காக 6 தடவை உலக கோப்பை தொடரில் விளையாடியவர் வீரர் இவர்.

இவர் பாகிஸ்தான் அணிக்காக மொத்தமாக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8832 ரன்கள் குவித்திருக்கிறார். இவ்வளவு டெஸ்ட் பேட்டிங் அவரேஜ் 52.57 ஆகும். மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்களும், 43 அரை சதங்களும், மேலும் 6 இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.

அதேசமயம் 233 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7381 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 41.47 ஆகும். மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 50 அரை சதங்களும் 8 சதங்களும் விளாசி இருக்கிறார்.

மேலும் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணிக்காக மொத்தமாக 24 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.