வெகு சீக்கிரமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட 11 ஜாம்பவான் வீரர்கள்

0
3909
Javagal Srinath and Kevin Pietersen

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தனது நாட்டு அணிக்காக குறைந்தபட்சம் 37 அல்லது 38 வயது வரை விளையாடுவார்கள். அதுவரை தங்களால் முடிந்த அளவுக்கு மிக சிறப்பாக விளையாடி பின்னர் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்கள் அதற்கு மாறாக வெகு சீக்கிரமாக தங்களுடைய ஓய்வு பற்றிய முடிவை அறிவித்து விடுவார்கள். அப்படி வெகு சீக்கிரமாக ஓய்வு எடுத்துக் கொண்ட 11 கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்

- Advertisement -

1. அலிஸ்டர் குக்

Alastair Cook ODI

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடுபவர் குக். குறிப்பாக அவருடைய 30 வயது வரை மிக சிறப்பாக அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விளையாடுவதைக் கண்ட அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும் நிச்சயமாக இவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விடுவார் என்றுதான் கூறினார்கள்.

ஆனால் அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் அவரால் சரிவர விளையாட முடியாத காரணத்தினால் தனது 33 வயதில் அலிஸ்டர் குக் ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.

2. கிரீம் ஸ்மித்

தென் ஆப்பிரிக்கா அணிகள் மிக சிறப்பாக விளையாடி அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய ஒரு தலைசிறந்த வீரர் கிரீம் ஸ்மித் ஆவார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக தன்னுடைய அணியை வழிநடத்துவதில் இவர் வல்லவர்.

- Advertisement -

அதே சமயம் ஒரு நாள் போட்டியிலும் இவர் மிக சிறப்பாக தனது அணியை வழிநடத்தி இருக்கிறார். இருப்பினும் தனது 33 வகைகள் கிரிக்கெட் வாழ்க்கை இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலிய அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரும் மைக்கல் கிளார்க் ஒருவர். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பை தொடரில் வழிநடத்தினார். அந்த ஆண்டு கூட இவர் மிக சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஒரு பங்காக விளங்கினார். இருப்பினும் அந்த தொடர் முடிந்ததும் 34 வயதில் தன்னுடைய ஓய்வை அவர் அறிவித்துவிட்டார்.

4. ஏபி டிவில்லியர்ஸ்

AB De Villiers ODI
Photo: BCCI

களத்தில் ஒரே இடத்தில் நின்று மைதானத்தில் எந்த பக்கத்திற்கும் பந்தை அடித்து விரட்டுவது இவர் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். 2018ம் ஆண்டு தன்னுடைய 34வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். இவர் என்னதான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தாலும் தற்போது வரை இன்னும் அதே ஏபி டிவிலியர்ஸ் ஆக மிக அபாரமாக விளையாடி வருகிறார். இவருடைய மறு வருகைக்காக தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. கெவின் பீட்டர்சன்

இவரது பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் இவருடைய ஸ்விச் ஹிட் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அதிரடியாக இவர் விளையாடுபவர். இருப்பினும் தன்னுடைய 34 வயதில் இவர் தன்னுடைய ஓய்வை எடுத்துக் கொண்டார்.

கண்டிப்பாக இவர் இன்னும் குறைந்த பட்சம் மூன்று நான்கு ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் வெகு சீக்கிரமாக இவர் ஓய்வு எடுத்துக் கொண்டது இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றம் அளித்தது.

6. சுரேஷ் ரெய்னா

இந்திய அணிக்காக பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கி பல வெற்றிகளை குவித்த வீரர் சுரேஷ் ரெய்னா. சமீப சில காலங்களாகவே இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத காரணத்தினால் என்னவோ மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிக்கையை வெளியிட்டு அடுத்த சில வினாடிகளில் இவரும் தன்னுடைய ஒரு அறிக்கையை வெளியிட்டார். தன்னுடைய 33 வயதில் இவர் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. அன்ட்ரூ பிளின்டாஃப்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் ஒரு தலைசிறந்த ஆல்ரவுண்டர் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல உடற் காயங்களை இவர் சந்தித்த காரணத்தினால் என்னவோ இவர் வெகு சீக்கிரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். இவர் தன்னுடைய 33 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. ஜவகர் ஸ்ரீநாத்

Javagal Srinath

இந்தியாவுக்காக மிக அற்புதமாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் ஸ்ரீநாத் என்பது அனைவருக்கும் தெரியும். தற்பொழுது எப்படி ஜஸ்பிரித் பும்ரா நன்றாக இந்திய அணிக்காக விளையாடுகிறாரோ, அதேபோல் முந்தைய காலகட்டங்களில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் ஸ்ரீநாத் ஆவார். சில உடற் காயம் காரணமாக மறுபடியும் இவரால் சரியாக விளையாட முடியாமல் போனது. எனவே தனது 33 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

9. முகமது ஆமிர்

பாகிஸ்தான் அணிக்காக சமீப காலத்தில் மிக சிறப்பாக பந்து வீசும் ஒரு பந்து வீச்சாளர் யார் என்றால் அது முகமது ஆமிர் தான். இருப்பினும் தன்னுடைய 28 வயதில் ஓய்வு பெறப் போவதாக கூறி ஓய்வும் எடுத்துக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இவர் தற்பொழுது இங்கிலாந்துக்குச் சென்று அங்கே குடியுரிமை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

10. கிரீம் ஸ்வான்

இன்னும் எனக்காக விளையாடிய தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் மிக அதிக காலம் கிரிக்கெட் விளையாடுவார்கள். இருப்பினும் இவர் தன்னுடைய 34 வயதில் ஓய்வு எடுத்துக்கொண்டார். இவர் ஓய்வு எடுத்துக் கொண்ட பொழுது கூட மிக சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல ஃபார்மில் இருந்த பொழுதும் கூட தன்னுடைய ஓய்வு எடுத்துக் கொண்டது பல இங்கிலாந்து ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.

11. ஷேன் பாண்ட்

நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒரு ஜாம்பவான் மிக பந்து வீச்சாளர் யார் என்றால் அது நிச்சயமாக பாண்ட் தான். அந்த அளவுக்கு எதிரணி பேட்ஸ்மேன்களை இவர் தனது பந்து வீச்சை மூலம் பயமுறுத்துவார். இருப்பினும் தன்னுடைய 34 வயதில் இவர் தன்னுடைய ஓய்வு எடுத்துக் கொண்டார். இருப்பினும் இவரது ஓய்வு குறித்த அறிக்கையில் பல சிக்கல் இருந்தது குறிப்பிடத்தக்கது.