மோசமான அம்பயரிங்; உலகக்கோப்பை தொடரில் அபூர்வ நிகழ்வு!

0
47922
T20wc22

எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் அம்பையர்களின் கவனக் குறைவில் மிக மோசமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது!

இந்த போட்டிக்கான டாசில் வென்று முதலில் பந்து வீசிய ஆப்கானிஸ்தான அணி ஆரம்பத்தில் ரன்களை கொடுத்தாலும் இறுதியில் மிகச் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியா அணியை 168 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இறுதி வரை களத்தில் நின்ற மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார்.

- Advertisement -

இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு நன்கு துவக்கம் கிடைத்தும், அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை தவறவிட்ட காரணத்தால் வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இறுதிவரை களத்தில் நின்ற ரஷீத் கான் ஆஸ்திரேலியா பந்துவீச்சை அடித்து நொறுக்கி அவர்களை உலகக் கோப்பையை விட்டு வெளியேற்றும் அளவுக்கு வெறித்தனமாக விளையாடினார். ஆனால் அவரது போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை.

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா விளையாடும் பொழுது நான்காவது ஓவரை நவீன் உல் ஹக் வீசினார். அந்த ஓவரில் 1, 1, 4, 2, 3 என ஐந்து பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இதற்கு அடுத்த ஆறாவது பந்து வீசப்படாமலே ஓவர் முடித்துக் கொள்ளப்பட்டது. இது களத்தில் இருந்த இரண்டு நடுவர்களும் கவனிக்கவில்லை, களத்திற்கு வெளியே இருந்த நடுவர்களும் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெல்ல இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறவில்லை.

ஆனால் கடந்த தசாப்தத்தில் ஆஸ்திரேலியா ஓவல் அடிலைடு மைதானத்தில் இந்தியா இலங்கை மோதிய போட்டியில், லஷீத் மலிங்கா வீசிய முப்பதாவது ஓவர் இப்படித்தான் ஐந்து பந்துகள் ஓடும் முடிக்கப்பட்டு அந்த ஆட்டம் டிராவில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது!

- Advertisement -