“அவர் பேட்டிங்  கவிதை மாதிரி” – இந்திய வீரர் பற்றி பொல்லார்ட் புகழ்ச்சி!

0
4892
Kieron pollard

டி20 கிரிக்கெட்டின் அடையாள வீரர் என்றால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கீரன் பொலார்ட்தான். இதுவரை ஒட்டுமொத்தமாக அவர் ஆறுநூறு போட்டிகளை விளையாடியிருக்கிறார். இதில் 11689 ரன்களை குவித்து இருக்கிறார். இவரது ரன் சராசரி 31.25. ஸ்ட்ரைக் ரேட் 150. அதிகபட்ச ஸ்கோர் 104. இதில் 309 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து வரும் 100 பந்து கிரிக்கெட் தொடரில் லண்டன் ஸ்ப்ரீட் அணிக்காக களமிறங்கி தனது 200வது டி20 போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் 11 பந்துகளில் 34 ரன்களை விளாசினார். உலகமெங்கும் நடக்கும் டி20 தொடர்களின் கதாநாயகன் இவர்தான்.

- Advertisement -

பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரில் 2010ஆம் ஆண்டு மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். கடந்த 13 வருடங்களாக மும்பை அணிக்காக இவர் விளையாடி வருகிறார். தற்போது மும்பை அணியின் மிக மூத்த வீரர் இவர்தான். மும்பை அணிக்காக இவர் மறக்க முடியாத பல போட்டிகளை விளையாடியிருக்கிறார்.

மும்பை அணியின் அடையாளமான இவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையவில்லை. மொத்தம் 11 போட்டிகளில் விளையாடிய இவர் 144 ரன்களை மட்டுமே எடுத்தார். இவரது ரன் சராசரி வெறும் 14. பேட்டிங் ஸ்ட்ரைக்ரேட்டோ 107. ஐபிஎல் வரலாற்றில் இவரது குறைந்தபட்ச ஸ்ட்ரைக் ரேட் இதுதான்.

இந்தச் சூழலில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இந்தச் சமயத்தில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வலைப்பந்து கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தற்போது இவர் இங்கிலாந்தில் 100 பந்து தொடரில் விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அரபு எமிரேட் நடக்கும் டி20 தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் என்று ஒரு அணியை வாங்கி இருக்கிறது. இந்த அணிக்காக தற்போது பிறன்பொருளாள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இவரது தொடர்பு ஐபிஎல் தாண்டி தொடர்கிறது.

தற்போது இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான, தமிழ் சாக ஐபிஎல் டீமின் வீரரும் நண்பருமான ரோகித் சர்மா பற்றி புகழ்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக ரோகித்சர்மா வருவதற்கு மிக முக்கியமான வீரர் துணை கேப்டன் ஆன கீரன் பொலார்ட்.

ரோகித் சர்மா பற்றி கீரன் பொலார்ட் கூறும்போது ” ரோகித் சர்மாவின் பேட்டிங் ஒரு கவிதை போன்றது. ஆடுகளத்தில் எதிர்முனையில் நின்று பேட்டிங்கை ரசிக்கக்கூடிய வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். உண்மையில் அவர் ஒரு மிகவும் புத்திசாலித்தனமான கேப்டன். அவர் கேப்டனாக இன்னும் பல கோப்பைகளை வென்று பல உயரங்களை தொடுவார். அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!