இலங்கை வீரர்களை அழைத்துச் செல்லும் தனியார் பேருந்தில் புல்லட் குண்டுகள் கண்டுபிடிப்பு – போலீசார் அதிர்ச்சி

0
80
Bullet Shells in Srilanka Team Bus

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் சற்று முன்னர் நடந்து முடிந்தது. மூன்று போட்டியிலும் இந்திய அணி இலங்கை அணியை மிக எளிதாக வீழ்த்தி அபார வெற்றி கண்டு ஒயிட் வாஷ் செய்துள்ளது. கேப்டன் ரோஹித் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 டி20 தொடரை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல இந்திய அணி தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி கண்டு ஆப்கானிஸ்தான் அணி செய்த சாதனையை இன்று சமன் செய்துள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பயன்படுத்திய தனியார் பேருந்தில் புல்லட் ஷெல்

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி லக்னோவில் நடைபெற்ற நிலையில் 2-வது மற்றும் 3-வது டி20 போட்டி மொஹாலியில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இலங்கை வீரர்கள் அனைவரும் சண்டிகரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று 2வது டி20 போட்டிக்காக அவர்கள் அனைவரும் தனியார் பேருந்தின் மூலமாக போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். போட்டி நடந்து முடிந்தவுடன் பேருந்தை மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்ததில் புல்லட் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பேருந்து சமீபத்தில் ஒரு தனியார் திருமண விழாவிற்கு பயன்படுத்தப்பட்ட பேருந்து என்று தெரியவந்தது. திருமணத்தில் இதுபோல துப்பாக்கிகளைக் கொண்டு குண்டு முழங்க கொண்டாடுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் ஒரு திருமண விழாவில் இவ்வாறு துப்பாக்கிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், யார் இவ்வாறு நடந்து கொண்டதென முறையான விசாரணை நடப்பதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் அந்த திருமணம் மற்றும் அந்தத் திருமணம் குறித்த கூடுதல் தகவல்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் போலீசார் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் அந்த பேருந்தின் ஓனரிடம் இது சம்பந்தமான முறையான விசாரணையை தற்போது நடத்தி வருவதாக கூடுதல் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இது சம்பந்தமான விசாரணை முழுவதுமாக முடிந்த பின்னர், அந்தப் பேருந்தில் புல்லட் ஷெல் எப்படி வந்ததென நாம் தெரிந்து கொள்ளலாம்.