இந்த வீரரை இந்திய “ஏ” அணியிலாவது தயவு செய்து எடுங்கள் – தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்!

0
322
DK

“இந்த வீரருக்கான வாய்ப்பை  மறுப்பதற்கு வழியே இல்லை  குறைந்தபட்சம் அவரை  இந்திய ‘ஏ’  அணியிலாவது   எடுத்தே தீர வேண்டும்”  என்று  28 வயதான  உள்நாட்டு கிரிக்கெட் வீரர் குறித்து  இந்திய  அணியின்  ‘விக்கெட் கீப்பர்’  தினேஷ் கார்த்திக்  கருத்து தெரிவித்துள்ளார் .

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்த அனைவரும் இந்திய அணி  இரண்டு தோல்விகளுடன்  ஒரு நாள் போட்டி தொடரை இழந்துள்ளது . இந்தத் தொடருக்கான இந்திய அணியில்  ‘விராட் கோலி’  ‘கேஎல் ராகுல்’  மற்றும் ‘கேப்டன் ரோஹித் சர்மா’  ஆகியோர் இடம் பெற்றதால்  அணியின் இளம் வீரர்களான  ‘சஞ்சு சாம்சன்’ மற்றும்  ‘சுக்மன் கில்’ ஆகியோர்  தேர்வு செய்யப்படவில்லை .

சும்மன் கில்லும்,சஞ்சு சாம்சனும்   நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில்  இடம் பெற்றிருந்தபோதும்  இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்  அணிக்கு திரும்பிய நிலையில்,  இவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை . இந்த இரண்டு இளம் வீரர்களும்  2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை அணிகள்  நிச்சயமாக விளையாடுவார்கள்  என்று பலரும்  கணித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது  இணைந்திருப்பவர் தான்  தமிழக  அணியின் ‘ ரஞ்சி கேப்டன்’  ‘பாபா இந்திரஜித்’ .

28 வயதான பாபா இந்திரஜித்  கடந்த ரஞ்சிப் போட்டியில்  மூன்று ஆட்டங்களில்  396 ரன்களை குறித்து இருந்தார். சென்ற ஆண்டில் இவரது ரஞ்சி சராசரி 99; ஆகும் .
இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில்  இவர் குறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக்  நிச்சயமாக  இவரை  இந்திய ‘எ’  அணியிலாவது  எடுத்தே தீர வேண்டும் .  தேர்வு குழுவினரால்  பாபா  இந்திரஜித்தை   தவிர்க்க இயலாது . அந்த அளவிற்கு  உறுதியான  ‘பெர்பார்மன்ஸ்ர்’களை  கடந்த போட்டிகளில் கொடுத்திருக்கிறார் .

நிச்சயமாக அவருக்கான நேரம் வரும்  அப்போது கண்டிப்பாக அவர் இந்திய அணிக்காக ஆடுவார்,  தன்னுடைய ஆட்டத்தின் மூலம்  தேரா குழுவினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார் . நிச்சயமாக அவருக்கான வாய்ப்பை தேர்வு குழுவினர் வழங்குவார்கள்” என்று  தினேஷ் கார்த்திக் கூறினார்.

நடைபெற இருக்கின்ற ரஞ்சித் டிராபி போட்டிகளில்  பாபா இந்திரஜித்  தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு  ரஞ்சி அணிக்காக  58 முதல் தர போட்டிகளில் ஆடி உள்ள இவர்  53.16 சராசரி உடன்  3987 ரன்களை சேர்த்துள்ளார் .