“ப்ளீஸ் விராட் கோலி, உங்க டீமோட எங்க நாட்டுக்கு வந்து ஆடுங்க” – பாகிஸ்தான்-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஷ்யம்! வைரலாகும் பாகிஸ்தான் ரசிகர்களின் புகைப்படம்!

0
1153

பாகிஸ்தான்-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்திய பதாகை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது போட்டி தற்போது முல்தான் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் பாகிஸ்தான் அணி 350 ரன்கள் இலக்கை செஸ் செய்து வருகிறது. இப்போட்டியின் போது மைதானத்தில் இருந்து பாகிஸ்தான் ரசிகர்கள் இருவர் ஏந்திய பதாகைகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பதாகையில், “விராட் கோலி எங்கள் நாட்டிற்காக வந்து ஆசிய கோப்பை விளையாடுங்கள். நாங்கள் பாபர் அசாமை விட உங்களை தான் ரசித்து வருகிறோம்.” என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்திருக்கிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, “இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாது. ஆகையால் வருகிற ஆசிய கோப்பையை நாங்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம். பொதுவான மைதானத்தில் வைத்தால் மட்டுமே நாங்கள் வருவோம்.” என்று அவர் பேசினார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ரமீஷ் ராஜா தக்க பதில் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நிலவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரிதாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏனெனில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. தங்களது சொந்த நாடுகளில் கண்டுக்களிக்க முடியவில்லை என்பதற்காக ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் போது பதாகைகள் ஏந்திக் காட்டியுள்ளனர்.

இரு தரப்பும் நேருக்கு நேர் அமர்ந்து இதற்கான முடிவை கொண்டு வர வேண்டும். மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.