பிறந்த நாட்டை விட்டு மற்ற நாட்டுக்காக டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட அணி

0
371
Imad Wasim and Eoin Morgan

2021 டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதம் கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நடத்தி வரும் இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் யுஏஇ மற்றும் ஓமன் ஆடுகளங்களில் நடக்கிறது. 10 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் நுழைந்தன. மீதமுள்ள 6 அணிகளில் இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா தகுதிச் சுற்று மூலம் உள்ளே வந்தன.

சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு வீரர் எந்த நாட்டிற்காக வேண்டுமானாலும் களமிறங்கலாம். அதற்கு அந்நாட்டின் குடியுரிமையை இவர் பெறவேண்டும். திறமை இருந்தும் சொந்த நாட்டில் வாய்ப்புக் கிடைக்காத ஏராளமான வீரர்கள் தற்போது நாடு தாவி விளையாடுகின்றனர். நடப்பு டி20 உலகக்கோப்பையில் பல வீரர்கள் அவ்வாறு ஆடுகின்றனர். அவ்வாறு ஆடும் 11 வீரர்களை வைத்து நாங்கள் ஓர் அணியை உருவாகி உள்ளோம். அதைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

தொடக்க வீரர்கள் – ஜேசன் ராய் & டெவோன் கான்வே

இருவரும் தென்னாபிரிக்காவில் பிறந்த அதிரடி ஒப்பனர்கள். ஜேசன் ராய், இங்கிலாந்து அணிக்ககவும் கான்வே, நியூசிலாந்து அணிக்காகவும் பணியாற்றி வருகின்றனர். நடப்பு டி20 கிரிக்கெட் உலகில், இந்த இரண்டு வீரர்களுமே டாப் பேட்ஸ்மேன்களாக கருதப்படுகின்றனர்.

மிடில் ஆர்டர் – கிளென் பிலிப்ஸ் ( கீப்பர் ), இயோன் மோர்கன் ( கேப்டன் ) & ரிச்சி பெரிங்டன்

இரு ஒப்பனர்களைப் போல மிடில் ஆர்டரிலும் தென்னாபிரிக்காவில் பிறந்த 2 வீரர்கள் உள்ளனர். அவர்கள் கிளென் பிலிப்ஸ் மற்றும் பெரிங்டன் ஆவர். பிலிப்ஸ், நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பராகவும் பெரிங்டன், ஸ்காட்லாந்தின் பேட்ஸ்மேனாகவும் செயல்படுகின்றனர். நாங்கள் உருவாக்கியுள்ள அணியின் கேப்டனாக மோர்கன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அயர்லாந்தில் பிறந்த இவர் 2021 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வழிநடத்துகிறார்.

ஆல்ரவுண்டர்கள் – இமாத் வாசிம், டேவிட் வீஸ் & சிமி சிங்

பாகிஸ்தான் நாட்டிற்காக ஆடும் வாசிம் வேல்ஸில் பிறந்தவர். இந்தியாவில் பிறந்த சிம் சிங், அயர்லாந்து நாட்டிற்காக பங்களித்து வருகிறார். இமாத் வாசிமைப் போல சிம் சிங்கும், சுழற்பந்து வீசும் ஆல்ரவுண்டர் ஆவார். தென்னாபிரிக்கவைச் சேர்ந்த ஐந்தாவாது வீரராக இப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர், டேவிட் வீஸ். சென்ற 2016 டி20 உலகக்கோப்பையில் கூட இவர் பிறந்த நாட்டிற்காக தான் ஆடினார். வாய்ப்புகள் இல்லாததால் நமீபியா அணியில் இணைந்து, அவர்களை சூப்பர் 12 சுற்று வரை அழைத்து வந்துள்ளார்.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள் – கிறிஸ் ஜோர்டன், டாம் கர்ரன் & இஷ் சோதி

ஜோப்ரா ஆர்சரைப் போல இவரும் வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இங்கிலாந்து நாட்டிற்காக பந்துவீசுகிறார். இவருடைய சக வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன், தென்னாபிரிக்கா நாட்டைச் சார்ந்தவர். இந்த லிஸ்டில் கடைசியாக இருப்பவர் நியூசிலாந்து அணியின் இஷ் சோதி. இவர் நம் இந்திய நாட்டில் பிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

பிளேயிங் XI

ஜேசன் ராய், டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் ( கீப்பர் ), இயோன் மோர்கன் ( கேப்டன் ), ரிச்சி பெரிங்டன், இமாத் வாசிம், டேவிட் வீஸ், சிம் சிங், கிறிஸ் ஜோர்டன், டாம் கர்ரன், இஷ் சோதி