டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது நமது டிஎன்ஏ விலேயே கிடையாது! – தினேஷ் கார்த்திக் அதிரடி கருத்து!

0
1083
DK

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது இதில் டாசில் வென்று முதலில் ஆடிய இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 278 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரண்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார் ..

பங்களாதேஷ் அணியின் தரப்பில் தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முன்னதாக முதலில் ஆடிய இந்திய அணி 41 ரன்கள் வரை விக்கெட்டுகளை இழக்காமல் ஆடிக் கொண்டிருந்தது . இந்திய அணியின் ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன .கேப்டன் ராகுல் 22 ரண்களிலும் விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர் .

- Advertisement -

இதனால் 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது அதிரடியாக ஆடிய ரிசப் பண்ட் அணியின் இலக்கை உயர்த்தினார் அதன் பின்னர் துரதிஷ்டவசமான முறையில் அவர் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார் . இந்திய அணி 112 ரண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் அனுபவ வீரரான புஜாராவுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதனால் ரண்ணும் வேகமாக உயர்ந்தது . இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடியாக 149 ரன்களை சேர்த்தனர்.முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு குறைந்த ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் புஜாரா 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார் .

முதல் நாள் ஆட்டநேர முடிவில் க்ரிக் பஸ் இணையதளத்தில் பேசிய இந்திய அணியின் ஸ்டார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்திய அணி ‘பாஸ்பால்’ அணுகுமுறையை செயல்படுத்தாது என்று கூறியுள்ளார். இது குறித்து விரிவாக பேசியுள்ள கார்த்திக் “இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி முக்கியமானது.பொதுவாக இது போன்ற ஆடுகளங்களில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் டிராவில் தான் முடிவடையும் . அது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தும் . எனவே இதனை மனதில் கொண்டு தான் நாங்கள் வெற்றிக்காக ஆக்ரோசமாக ஆடுவோம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

மேலும் இது குறித்து பேசிய அவர் “இது போன்ற ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஓவருக்கு நாலு ரன்கள் எடுப்பது என்பது கடினமான ஒன்று மேலும் ஆட்டத்தின் துவக்கம் முதலே தாக்குதல் பாணியில் ஆடுவது என்பது எல்லா வீரர்களும் முடியாது அது நம் ‘டிஎன்ஏ’ விலும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்,

- Advertisement -

“இது போன்ற ஆடுகளங்களில் ஆடுவதற்கு பெரிய கிரிக்கெட் டெக்னிக் எதுவும் தேவையில்லை மரபு வழி கிரிக்கெட்டை சரியாக ஆடினாலே போதும் ஆனால் பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்” என்று கூறி முடித்தார்.