உலகக்கோப்பையின் சிறந்த பிளேயிங் 11 தேர்வு; இளம் இந்திய வீரருக்கு இடம்?

0
6572

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடரின் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த எட்டாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது இங்கிலாந்து அணி.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடரில் அந்தந்த இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடிய 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறது ஐசிசி. இதில் 12 வது வீரராக இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்த ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் இருவரும் சிறந்த பிளேயிங் லெவனில் துவக்க வீரர்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி விராட் கோலியும் நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதுவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஐந்தாவது இடத்தில் இந்த உலக கோப்பையில் சதம் மற்றும் அரைசதம் அடித்த கிளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நியூசிலாந்து அணி அரை இறுதிப் போட்டி வரை வருவதற்கு இவர் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட சிக்கந்தர் ராசா இந்த பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு சுழல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய சதாப் கான் இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

தொடர் நாயகன் விருது பெற்ற சாம் கர்ரன் இந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் இடம் பெற்று இருக்கிறார். இத்தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து பேச்சாளர் ஆண்ட்ரிக் நார்க்கியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு சூப்பர் 12 சுற்றில் அபாரமாக பந்துவீசிய மார்க் வுட் ஆகிய இருவருக்கும் இடம் கிடைத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் மற்றும் டெத் இரண்டிலும் பந்துவீச்சில் அசத்திய சாஹின் அப்ரிடிக்கு இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உலககோப்பையின் சிறந்த 11 வீரர்கள்: (ஐசிசி தேர்வு)