“நாங்க ஜெயிக்கணும் வாத்தியரே டிப்ஸ் கொடுங்க” – வங்கதேச வீரருக்கு டிப்ஸ் கொடுத்த ராகுல் டிராவிட்!

0
548

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ராகுல் டிராவிட்-இடம் டிப்ஸ் கேட்டிருக்கிறார் பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம்.

வங்கதேசம் மற்றும் இந்தியா இரு அணிகளும் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால் அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அவரை இந்தியாவிலேயே இருக்கும்படி பணித்தது. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார்.

அபிமன்யு ஈஸ்வரன் 2வது டெஸ்டிலும் மாற்று வீரராக நீடிக்கிறார். கே எல் ராகுல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக நீடிப்பார் என்று சந்தேகத்திற்கு இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முகமது சமி காயம் காரணமாக வெளியேறியதால், அவருக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்த நவ்தீப் ஷைனி, பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் அணியில் இருந்து விலகியுள்ளார்.

இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்பிகுர் ரஹீம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடம் சில அறிவுரைகளை கேட்டுள்ளார். அதற்கு ராகுல் டிராவிட் எவ்வித தயக்கமும் இன்றி உரிய முறையில் டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

இந்திய அணியில் மாற்றம்:

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் இடம் பெற வேண்டிய ஜெயதேவ் உனட்கட் விசா பிரச்சனை காரணமாக முதல் போட்டிக்கு சரியான நேரத்தில் வர முடியாமல் போனது. அடுத்த இரு தினங்களில் அவர் பங்களாதேஷ் வந்து விடடார்.

உனட்கட் நிச்சயம் இரண்டாவது போட்டியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் சரிவர செயல்படாத ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியில் அமர்த்தப்படலாம். அணியில் இந்த இரு மாற்றங்களுடன் இந்தியா களமிறங்க உள்ளது.