கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பதைவிட எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் மிகவும் முக்கியம். இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தாராம். ஆனால் அவரது உயரமும் காலமும் அவரது பாதையை மாற்றியமைக்க தற்போது மொத்த பேட்டிங் உலகின் பிதாமகன் சச்சின் தான். இதேபோல பல பந்துவீச்சாளர்கள் வேகப்பந்துவீச்சாளர் ஆளாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து காலப்போக்கில் சுழற்பந்து வீச்சாளர்களாக மாறி வெற்றியும் பெற்றுள்ளனர். சிலநேரம் வீரர்களின் உடல் ஒத்துழைக்காமல் போனதன் காரணமாக வும் காயங்கள் அதிகமாக ஏற்படுவதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் அதை விடுத்து விட்டு சுழற்பந்து வீச்சை வீரர்கள் தேர்வு செய்கிறார்கள். அப்படிப்பட்ட 7 பேர் குறித்து இங்கு காண்போம்.
1.முத்தையா முரளிதரன்
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள முரளிதரன் தனது ஆரம்ப காலத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆகவே வளர்ந்து வந்திருக்கிறார். 14 வயதில் தனது பள்ளிக்கூட பயிற்சியாளர் சொல்லியதால் வேகப்பந்து வீச்சை விட்டுவிட்டு சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார் முரளிதரன்.
2.அணில் கும்ப்ளே
இந்திய அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு மித வேகப்பந்து வீச்சாளர் ஆகவே இருந்துள்ளார். தற்போதும் அந்த மித வேகப்பந்து வீச்சாளரான குணத்தை கும்ளேவின் ஸ்பின் பவுலிங்கிலும் காணலாம். தனது சகோதரனின் அறிவுரையை ஏற்று வேகப்பந்து வீச்சுக்கு இருந்து சுழற்பந்து வீச்சாளராக கும்ப்ளே மாறியுள்ளார்.
3.ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய அணியின் தற்போதைய சூழல் சூறாவளி அஸ்வின் துவக்கத்தில் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன் என்று பலரும் அறிந்திருப்பர். அதைவிட முக்கியமாக அஸ்வின் தனது கேரியரை ஆரம்பிக்கும் பொழுது அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆகவே இருந்துள்ளார். அதன்பிறகு பள்ளி காலங்களில் தான் வேகப்பந்து வீச்சை விட்டுவிட்டு சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார் அஸ்வின்.
4.யுஸ்வேந்திர சாஹல்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் சூழல் முகமாக தற்போது விளங்கிக் கொண்டிருக்கும் சஹால் தனது ஆரம்ப காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உடல்நிலை மிகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதாலும் அடிக்கடி காயங்கள் ஏற்படும் என்பதாலும் அவர் சுழற்பந்து வீச்சுக்கு மாறியதாக தெரிகிறது. மேலும் இவர் இப்படி மாறியதில் இவரின் தந்தைக்கு தான் பங்கு அதிகம். அவர் கூறியதை கேட்டு தான் வேகப்பந்து வீச்சை விட்டுவிட்டு சுழற்பந்து வீச்சுக்கு வந்துள்ளார் சஹால்.
5.அஜாஸ் படேல்
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான நாடுகளுக்கு எப்போதெல்லாம் கிரிக்கெட் ஆட சொல்கிறதோ அப்போதெல்லாம் அணியில் இடம் பெற்றிருக்கும் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல். தனது முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். அதுமட்டுமல்லாது முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருதும் வென்றவர் இவர். ஆனால் இந்த சூழல் நாயகன் தனது கேரியரை ஆரம்பிக்கும்போது வேகப்பந்துவீச்சாளராகவே ஆரம்பித்துள்ளார். ஆச்சரியம் என்னவென்றால் தனது இருபத்தி ஒரு வயது வரைக்கும் சுழற்பந்து வீச்சாளராக இல்லாமல் வேகப்பந்து வீச்சாளராக தொடர்ந்துள்ளார். அதன் பிறகுதான் சுழற்பந்து வீச்சில் கவனம் செலுத்தி தற்போது வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
6.முகமது ரஃபிக்
வங்கதேச அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக தற்போதுவரை அறியப்பட்டுக் கொண்டிருக்கும் முகமது ரபிக் ஒரு வேகப்பந்து வீச்சாளர் தான். உள்ளூர் போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கும்போது பயிற்சியாளர் வாசிம் ஹைதர் கூறியதை கேட்டு வேகப்பந்து வீச்சில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு மாறியுள்ளார் இவர். சுழற்பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகளை அள்ளிய பிறகு திரும்பி வேகப்பந்து வீச்சுக்கு செல்லவில்லையாம்.
7.வருன் சக்ரவர்த்தி
தற்போது டி20 உலக கோப்பையில் விளையாட காத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். அதன்பிறகு முழங்காலில் ஏற்பட்ட ஒரு காயம் காரணமாக வேகப்பந்து வீச்சுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சுழற்பந்து வீச்சை தனது ஆயுதமாக தேர்ந்தெடுத்துள்ளார் சக்கரவர்த்தி.