ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் முதல் ரன் அடித்த வீரர்கள்

0
220
Rahul Dravid and Parthiv Patel IPL
Photo: BCCI/IPL

ஐபிஎல் லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல் லீக் தொடர் நடத்துவதற்கு முக்கிய காரணமே மறைந்து கிடக்கும் இளம் வீரர்கள் வெளியே வந்து பெரிய வெளிச்சத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக தான். ஐபிஎல் லீக் தொடரை பயன்படுத்தி தங்களுடைய திறமையை நல்ல வகையில் காட்டி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தருவதற்கு இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

ஆரம்பித்த நோக்கம் சரியாக வண்ணம் ஒவ்வொரு தொடரிலும் அற்புதமான பல வீரர்கள் அனைவராலும் பாராட்டப்படுகின்றனர். அதே சமயம் இந்திய அணியில் அவர்களுக்கு விளையாடும் வாய்ப்பை வழங்குகிறது. ஐபிஎல் தொடர் மூலம் பல வீரர்கள் இந்திய அணியில் தற்போது விளையாடிக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அப்படிப்பட்ட இல்ல பெருமை வாய்ந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் அதனுடைய முதல் போட்டியில் அந்த அணிக்காக முதலில் களமிறங்கி முதல் ரன் அடித்த வீரர்களைப் பற்றி பார்ப்போம்

பார்த்தீவ் பட்டேல் – சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணிக்காக முதல் தொடரிலேயே பார்த்தீவ் பட்டேல் விளையாடினார். 2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னை அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணிக்கு அதுவே முதல் போட்டியாக இருந்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணியில் இருந்து பார்த்தீவ் பட்டேல் ஓபனிங் வீரராக களமிறங்கினார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ வீசிய பந்தை எதிர்கொண்டு சென்னை அணிக்காக முதல் ரன்னை பார்த்தீவ் பட்டேல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை மூன்று கோப்பையை தன் கைவசம் வைத்திருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் ஐந்து முறை ரன்னர் அப் பட்டத்தையும் அந்த அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி டேர்டெவில்ஸ் – கௌதம் கம்பீர்

டெல்லி அணிக்காக அவருடைய முதல் போட்டியில் கௌதம் கம்பீர் முதல் ரன்னை அடித்தார். எதிரணியில் முனாஃப் பட்டேல் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். டெல்லி அணி நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தற்பொழுது வரை டெல்லி அணி எந்த தொடரையும் கைப்பற்றாமல் தன் கைவசம் ஒரு கோப்பை கூட இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கரண் கோயேல்

பஞ்சாப் அணி அதனுடைய முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடியது பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் ஓவரை ஜேக்கப் ஓரம் வீசினார். சீனியர் வீரரான அவரது பந்தை எதிர்கொண்ட கரன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். அந்த பவுண்டரியின் மூலம் பஞ்சாப் அணியின் முதல் ரன்னை எடுத்த வீரர் என்ற பெருமை கரன் கோயேலுக்கு சொந்தமானது. பஞ்சாப் அணியும் டெல்லி அணியை போலவே இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பிரண்டன் மெக்கல்லும்

முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அந்த முதல் போட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். முதல் போட்டியில் முதல் பந்தை பெங்களூரு அணியின் ஜாகிர்கான் வீசினார். முதல் பந்தையே மேற்கொண்ட நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆட்ட முடிவில் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் லீக் தொடரில் முதல் செஞ்சுரி அடித்த வீரரும் அவரே ஆவார். கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் – லூக் ராஞ்சி

மும்பை அணி அதனுடைய முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக களம் இறங்கியது. முதல் ஓவரை பிரவீன்குமார் பெங்களூரு அணி சார்பாக வீசினார், அந்த பந்தை மும்பை அணியின் பேட்ஸ்மேன் லூக் ராஞ்சி மேற்கொண்டார். முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்காத நிலையில் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அதன் மூலம் மும்பை அணியின் முதல் ரன்னை குவித்த வீரராக லூக் ராஞ்சி இன்றுவரை அறியப்படுகிறார். ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றி வாய்ந்த அணியாகவும் அதிக முறை கோப்பையை கைப்பற்றி அணியாகவும் விளங்கும் மும்பை அணியின் முதல் ரன்னை அடித்ததில் அவர் என்றுமே பெருமிதம் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் – டருவார் கோலி

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே இளம் வீரர்கள் திறமை வெளியே அறியப்படுவதற்கு அதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாக ராஜஸ்தான் அணியின் முதல் போட்டி அமைந்தது. ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசினார்.

அப்போது ராஜஸ்தான் அணிக்காக ஒரு இளம் வீரர் ஓபனிங் வீரராக களமிறங்கினார். முதல் 5 பந்துகளில் ரன் எதுவும் அடிக்காத அந்த வீரர் கடைசி பந்தானா ஆறாவது பந்தை தூக்கி அடித்து சிக்சராக மாற்றினார். அந்த இளம் வீரர் தான் டருவார் கோலி. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்காக முதல் ரன்னை அடித்த வீரர் என்ற பெருமை இளம் வீரர் டருவார் கோலிக்கு சென்றடைந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டிராவிட்

முதல் போட்டியே மிகப்பெரிய தலைவலியாக பெங்களூர் அணிக்கு அமைந்தது. முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி பிரெண்டன் மெக்கல்லம் அதிரடியாக விளையாடிய காரணத்தினால் இலக்காக 223 ரன்கள் பெங்களூரு அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

முதல் போட்டியிலேயே இமாலய இலக்கை மேற்கொண்ட பெங்களூரு அணியின் சார்பாக ராகுல் டிராவிட் ஓபனிங் வீரராக களமிறங்கினார். அப்பொழுது அசோக் திண்டா வீசிய முதல் பந்தை சிங்கிள் எடுத்து முதல் ரன்னை ஸ்கோர் செய்தார். இதன்மூலம் பெங்களூரு அணியின் முதல் ரன்னை அடித்த வீரர் என்ற பெருமை ராகுல் டிராவிடுக்கு சென்றடைந்தது. அந்தப் போட்டியின் முடிவில் கொல்கத்தா அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

டெக்கான் சார்ஜர்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – ஆடம் கில்கிறிஸ்ட்

முதல் போட்டியை மிகப்பெரிய அளவில் வெற்றி கண்ட கொல்கத்தா அணி அதனுடைய 2வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு முதல் போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. அணியின் ஓபனிங் ஆட்டக்காரர் ஆடம் கில்கிறிஸ்ட் கொல்கத்தா அணி பந்து வீச்சாளர் அசோக் திண்டா வீசிய முதல் ஓவரில் அணியின் முதல் ரன்னை குவித்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணியின் முதல் ரன்கள் குவித்த வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆனார் என்பதும் அதே சமயம் ஹைதராபாத் அணிக்காக முதல் கோப்பையை கைப்பற்றி தந்த முதல் கேப்டனும் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.