ஒரு காலத்தில் எதிரெதிர் அணிக்கு யு-19 உலக கோப்பை தொடரில் விளையாடி தற்போது ஒரே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள்

0
1039
Moeen Ali Jadeja and Rohit Pollard

ஐபிஎல் தொடரின் சிறந்த விஷயமே சர்வதேச தொடர்களில் எதிர் எதிர் அணிக்கு விளையாடியவர்கள் ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு விளையாடுவது தான். சச்சின் – ஜெயசூர்யா, கோலி – டிவில்லியர்ஸ் போன்ற எத்தனையோ சிறந்த வேறு வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளனர். அதேபோல ஒருகாலத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் வேறு வேறு நாடுகளுக்கு விளையாடி தற்போது ஒரே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் குறித்து பார்ப்போம்.

மொயின் அலி, ஜடேஜா, புஜாரா – சென்னை சூப்பர் கிங்ஸ்

தற்போது ஒன்றாக சென்னை மணிக்கு விளையாடி வரும் மூன்று வீரர்களான ஜடேஜா புஜாரா மற்றும் மொயின் அலி ஆகியோர் எல்லாம் ஒரு காலத்தில் வேறு வேறு நாடுகளுக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் பங்கேற்று உள்ளனர். 2006ம் ஆண்டு நடந்த தொடரில் ஜடேஜா மற்றும் புஜாரா இருவரும் இந்திய அணிக்காகவும் மொழியின் இங்கிலாந்து அணிக்காகவும் விளையாடி உள்ளார்.

- Advertisement -

ரோகித், பியூஸ் சாவ்லா மற்றும் கீரன் பொல்லார்டு – மும்பை இந்தியன்ஸ்

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோகித் சாவ்லா மற்றும் பொலார்ட் என இந்த மூவரும் ஒரு காலத்தில் அண்டர்-19 உலக கோப்பையில் வேறுவேறு நாடுகளுக்காக விளையாடியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் ரோகித் மற்றும் சாவ்லா என இருவரும் இந்திய அணிக்கும் பொல்லார்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடினார்.

வில்லியம்சன், கோஸ்வாமி, மணிஷ் மற்றும் கவுல் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் வில்லியம்சன், மணிஷ் மற்றும் கோஸ்வாமி மற்றும் கவுல் என நால்வரும் விளையாடினர். தற்போது இந்த நால்வரும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். ஆனால் இவர்கள் உலக கோப்பை ஆடும்போது வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காகவும் மற்ற மூவரும் இந்திய அணிக்காகவும் விளையாடினர்.

ஜெய்தேவ் உணத்கட் மற்றும் இவின் லீவிஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்

தற்போது ராஜஸ்தான் அணிக்காக ஒருங்கிணைந்து விளையாடி வரும் இரண்டு முக்கிய வீரர்களான உணத்கட் மற்றும் லீவிஸ். கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்த இருவரும் விளையாடினர். உணத்கட் இந்திய அணிக்காகவும் லீவிஸ் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காகவும் விளையாடினார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் மற்றும் ரபாடா – டெல்லி கேப்பிடல்ஸ்

தற்போதைய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய பேட்டிங் வீரரான ஸ்ரேயாஸும் முன்னணி பந்து வீச்சாளரான ரபாடாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் விளையாடினர். ஸ்ரேயாஸ் இந்திய அணிக்காகவும் ரபாடா தென்னாப்பிரிக்க அணிக்காகவும் விளையாடினர்.