ஐபிஎல் 2022-ல் ஒரே ஒரு ஆட்டத்தோடு அணியில் இருந்து நீக்கப்பட்டு பெஞ்சில் இருக்கும் 5 வீரர்கள்

0
2643
Devon Conway CSK

இந்த ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் புதிய இரு அணிகளின் வரவால், சரியான வீரர்களுக்கான பற்றாக்குறை உருவாகி இருந்தது. தொடரின் பாதி வரையிலுமே சரியான ஆடும் லெவனை கண்டுபிடிப்பதற்கு எல்லா அணிகளுமே சின்ன சின்ன மாற்றங்களைச் செய்துவந்தன. முக்கிய வீரர்களை காயத்தால் இழந்த சென்னை, சில வீரர்களின் மேல் அதிக விலைக்குப் போய் சிக்கிக்கொண்ட மும்பை ஆகிய அணிகள் இப்போது வரை, ஆடும் லெவனுக்கான சரியான வீரர்களைக் கண்டறியவில்லை என்றே கூறலாம். இதனால் சில வீரர்கள் ஒரு ஆட்டத்தோடு அணியிலிருந்து வெளியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரென்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

1. டிவோன் கான்வோ

பாஃப் டூ பிளிசிஸ்க்கு மாற்றாக சென்னை அணியால் இந்த நியூசிலாந்து ஓபனிரின் மீது அதிக எதிர்பார்ப்பிருந்தது. தீபக் சாஹர், ஆடம் மில்னே காயத்தால், ப்ரட்டோரியஸ் ஆடியாக வேண்டியதிருந்ததால், இவரை ஆடும் லெவனுக்குள் சென்னை அணியால் மீண்டும் கொண்டுவர முடியவில்லை.

2. பேபியன் ஆலன்

லெப்ட்-ஹேன்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் ஆல்-ரவுண்டரான இந்த கரீபியனுக்கு, பாஸ்ட்-பவுலர்களின் தேவையும், ரிஸ்ட் ஸ்பின்னர்களின் தேவையும், மும்பை, புனே ஆடுகளங்களில் இருப்பதால், ஒரு ஆட்டத்திற்கு மேல் மும்பை அணியால் வாய்ப்பு வழங்க முடியவில்லை.

3. ஜேம்ஸ் நீசம்

நியூசியின் இந்த பேட்ஸ்மேன் மீடியம் பாஸ்ட் ஆல்-ரவுண்டரின் தேவை ராஜஸ்தான் அணிக்குத் தேவைப்படாமல் இருக்கிறது. காரணம் இவர் ஐந்தாவது பந்துவீச்சாளருக்கான திறமையோடு இல்லையென்பதுதான். இதனால்தான் ஒரு வாய்ப்போடு ராஜஸ்தான் நிறுத்திக்கொண்டுள்ளது. பாஸ்ட் பவுல் ஆல்ரவுண்டராய் இருந்திருந்தால் வாய்ப்பு 100% உறுதி.

4. கமலேஷ் நாகர்கோட்டி

தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை முடித்துவிட்டு வருவதற்கு, பங்களாதேசின் பாஸ்ட் பவுலர் முள்தாபிசூருக்கு தாமதமானதால், ஆச்சரியமாக சேட்டன் சக்காரியாவுக்குப் பதிலாக வாய்ப்பை பெற்றார். அடுத்து முஸ்தாபிசூர் வர, தற்போது பெஞ்சில் இருக்கிறார்.

5. அமன் ஹக்கீம் கான்

பவர்-ப்ளே, மிடில் ஓவர்களில் பட்டையைக் கிளப்பும் கொல்கத்தாவின் தலைவலியே டெத் ஓவர்கள்தான். இந்தப் பிரச்சினையால் சிவம் மாவி, ராஸிக் சலம், டிம் செளதி, பேட் கம்மின்ஸ் என இதுவரையில் தொடர்ந்து பரிசோதனையிலயே இருக்கிறது கொல்கத்தா அணி. இந்தப் பரிசோதனை முயற்சியில் வாய்ப்பைப் பெற்றவர், ஒரு ஆட்டத்திற்குப் பிறகு பெஞ்சில் இருக்கிறார்.