வருங்கால சென்னை அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்க தகுதியுள்ள 5 வீரர்கள்

0
54397
Kane Williamson and Ravichandran Ashwin
Photo Source: Twitter

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அடுத்த வருடம் நடைபெறும் ஐ.பி.எலிலும் பங்கேற்பார் என்று சி.எஸ்.கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். எனினும் தோனிக்கு அடுத்த வருட ஐ.பி.எலே கடைசி வருடமாக இருக்கும். கேப்டன் தோனி ஐ.பி.எலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் சென்னை அணிக்கு ஒரு நல்ல அனுபவமுள்ள கேப்டனை தயார் செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது ஆசையும்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் இன்னும் சில நல்ல கேப்டன்களை சென்னை அணி எடுக்காலாம். எம்.எஸ்.தோனியுடன் ஒரு வருடம் விளையாட அந்த வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அது அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். அப்படி இல்லையெனில் தற்போது உள்ள சென்னை அணியில் ஒரு நல்ல வீரரை கேப்டனாக நியமிக்கலாம்.

- Advertisement -

வருங்கால சென்னை அணிக்கு கேப்டன் ஆகும் தகுதியுள்ள 5 வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. கேன் வில்லியம்சன்:

உலகின் தலைசிறந்த 4 கிரிக்கெட் வீரர்களிள் கேன் வில்லியம்சனும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 2019 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

- Advertisement -

கேன் வில்லியம்சன் தான் அடுத்த சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக வர வேண்டும் என்று சென்னை அணி ரசிகர்களும் விரும்புகின்றனர். ஹைதராபாத் அணி வார்னர் மற்றும் ரஷீத் கானை தக்கவைத்துக் கொள்ள விரும்புவர். அதனால் சென்னை அணி வில்லியம்சனை மெகா ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது.

2. டூ பிளெசிஸ்:

தென்னாப்பிரிக்கா வீரரான டூ பிளெசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல வருடங்கள் பணியாற்றி வருகிறார். சென்னை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரரும் இவரே. ஏலத்தில் இவரை சென்னை அணி இருமுறை ஆர்.டி.எம் செய்துள்ளது.

சென்னை அணியைப் பற்றியும் அதில் உள்ள வீரர்களைப் பற்றியும் இவருக்கு நன்றாகவே தெரியும். தென்னாபிரிக்கா அணியை வழிநடத்திய அனுபவமும் டூ பிளெசிஸ்க்கு உள்ளது. ஆகையால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இவரிடம் கேப்டன்சி பொறுப்பை தாராளமாக ஒப்படைக்கலாம்.

3. ரவீந்திர ஜடேஜா:

2020 ஐ.பி.எல் சென்னை அணிக்கு மிக மோசமாக அமைத்தது. இருப்பினும் அந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. பேட்டிங் , பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

ஐ.பி.எலில் 2000+ ரன்கள், 100+ விக்கெட்டுகள் மற்றும் 50+ கேட்சுகள் எடுத்துள்ளார். மேலும் தோனியுடன் விளையாடிய அனுபவமும் அவரிடம் உள்ளது. தற்போது உள்ள சென்னை அணியின் துணை கேப்டன் ஜடேஜா தான் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனால் வருங்கால சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் திறமையும் தகுதியும் ஜடேஜாவிடம் இருக்கிறது.

4. ரவிச்சந்திரன் அஸ்வின்:

முன்னாள் சென்னை வீரரான அஸ்வின் பஞ்சாப் அணியை ஒருவடம் வழிநடத்தி உள்ளார். பின்னர் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சென்றுவிட்டார். ஒரு ஆல்ரவுண்டராக மட்டுமில்லாமல் கேப்டனாகவும் செயல்படும் திறமை அஸ்வினிடம் உள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சென்னை அணிக்காக வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். மெகா ஏலத்தில் டெல்லி அணி இவரை தக்க வைத்துக் கொள்ள வாய்பில்லை. அதனால் சென்னை அணி இவரை ஏலத்தில் இருந்து எடுத்து கேப்டனாக நியமிக்கலாம். அது சென்னை அணிக்கு நல்லதாகவே இருக்கும்.

5. தினேஷ் கார்த்திக்:

2018ல் அதிக தொகை கொடுத்து கொல்கத்தா அணி தினேஷ் கார்த்திக்கை வாங்கியது. தன்னால் இயன்றவரை சிறப்பாகவே அவர் வழிநடத்தினார். பின்னர் 2020ல் கேப்டன்சி வேண்டாம் என்று தானே விலகிக் கொண்டார். சென்னைசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் தினேஷ் கார்த்திக்கின் நீண்ட நாள் ஆசை.

ஸ்டெம்ப்பிற்கு பின்னால் விக்கெட் கீப்பராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். அடுத்த வருட ஐ.பி.எலுக்கு தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொள்ள வாய்பில்லை என்பதால் சென்னை அணி இவரை எடுக்கலாம். தோனிக்கு பிறகு ஸ்டெம்ப்பிற்கு பின்னால் நின்று வழிநடத்தும் திறமை கார்த்திக்கிடம் உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.