வெளிநாடுகளில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய 3 கிரிக்கெட் வீரர்கள்

0
11464
Robin Singh Team India

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது மிகப்பெரிய விளையாட்டாக உள்ளது. காரணம் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் முதல் ரன் மெஷின் கிங் கோலி வரை அனைவரும் இந்தியர்கள். உலகம் போற்றும் தலை சிறந்த வீரர்கள் அனைவரும் இந்தியாவில் இருப்பதினால் கிரிக்கெட் இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது . கிரிக்கெட் விளையாடும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அது பலருக்கு அமைவதில்லை.

இதனால் சில வீரர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளி நாட்டு அணிகளுக்கு விளையாடுகிறார்கள் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறப்புரிமை இந்தியாவில் இல்லாமல் வெளிநாடுகளில் பிறந்து இந்திய அணிக்காக சில வீரர்கள் விளையாடி உள்ளார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கா, ஆம் அத்தகைய வீரர்கள் யார் ? எத்தனை பேர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

- Advertisement -

3.அசோக் காந்தோத்ரா – பிரேசில்

இன்று வரை பிரேசிலில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய ஒரே வீரர் இவர் மட்டுமே. பிரசிலை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1966 ஆம் ஆண்டு தனது 17 வயதில் டெல்லி அணிக்காக ரஞ்சி விளையாடினார். இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் .1969-1970 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தல ஒரு ஒரு போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் . இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 54 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் . இவரது மோசமான ஃபார்ம் காரணமாக கழட்டிவிடப்பட்டார் . உள்ளூர் போட்டிகளிலும் சொதப்ப அவருக்கு அங்கையும் வாய்ப்பு மறுக்கபட்டது.தனது 26வது வயதிலேயே கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது அசோக் காந்தோத்ராவிற்க்கு

3.ராபின் சிங் – ட்ரினிடாட் & டொபாகோ

Robin Singh Mumbai Indians

வெளிநாட்டில் பிறந்து இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடி வீரர் என்றால் அது ராபின் சிங் மட்டுமே . ஆல்ரவுண்டரான ராபின் சிங் இதுவரை 136 ஒருநாள் போட்டிகள் விளையாடி 2336 ரன்களையும் 69 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாவே அணிக்கு எதிராக 1998 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார் இதனால் இவரது அறிமுக போட்டியே இறுதிப்போட்டியானது . முதல்தர போட்டிகளில் 11000 ரன்களைக் குவித்து 300+ விக்கெட்டுகளைப் கைப்பற்றினார். 1989 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவிற்க்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் . தமிழக அணிக்காக ரஞ்சி போட்டி விளையாடினார்.

1. லால் சிங் – மலேசியா

1909 ஆம் ஆண்டு மலேசிய கோலாலம்பூரில் பிரந்த லால் சிங் 32 முதல் தர போட்டிகளில் விளையாடி இவர் 1123 ரன்களையும் 23 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் . பஞ்சாப் அணிக்காக விளையாடி இவர் ஐந்து அரைசதம் ஒரு சதம் அடித்துள்ளார். இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடினார்.1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான இவர் 43 ரன்களை அடித்தார்.

- Advertisement -