ஒவ்வொரு அணியிலும் ஐபிஎல் 2021 இரண்டாம் பகுதிக்கு நோ சொன்ன வீரர்களின் பட்டியல்

0
2721
Kohli and Rahul

ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடந்த முதல் சில ஆட்டங்கள் கொரோனா நோய் பரவல் காரணமாக தொடர்ந்து நடத்த இயலாமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அதிக பாதுகாப்புடன் இரண்டாம் பகுதி தொடங்க உள்ளது. இன்னமும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ளதால் தற்போதே சில அணிகளைச் சேர்ந்த வீரர்கள் எல்லாம் பயிற்சியை ஆரம்பித்து விட்டனர்.

கொரோனா தொற்று பரவல் குறித்த பயம் காரணமாகவும், குடும்பத்தை விட்டு நெடுநாட்கள் பிரிந்து இருக்க வேண்டிய சூழல் காரணமாக பல வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதை தவிர்த்து உள்ளனர். அப்படி தொடரில் பங்கேற்காமல் தவிர்த்த முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

1. பஞ்சாப் கிங்ஸ் – ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடீத்

ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் பஞ்சாப் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஆக விளங்கிய ரிச்சர்ட்சன் மற்றும் மெரிடீத் என இருவரும் இந்த இரண்டாம் பகுதியில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறிவிட்டனர். ரிச்சர்ட்சன் மூன்று ஆட்டங்களில் விளையாடி 3 விக்கெட்டுகளை பஞ்சாப் அணிக்காக எடுத்துள்ளார் அதேபோல மெரீடித்தும் 5 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

2. ராஜஸ்தான் ராயல்ஸ் – பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஆண்ட்ரூ டை

ராஜஸ்தான் அணி தங்கள் அணியின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய மூன்று முக்கிய இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியில் இழந்துள்ளது. பட்லர் ஸ்டோக்ஸ் ஆர்ச்சர் என்று மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் தற்போது ராஜஸ்தான் அணி களமிறங்க காத்திருக்கிறது. பட்லரினன் சிறந்த துவக்கத்தையும் ஸ்டோக்ஸின் ஆல்ரவுண்டர் திறமைகளையும் இழந்தது மட்டுமல்லாமல் ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சையும் பிறந்துள்ளது ராஜஸ்தான் அணி. அதோடு நில்லாமல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டையின் வேகப்பந்து வீச்சு திறமையையும் ராஜஸ்தான் அணி இழந்துள்ளது.

3. கொல்கத்தா – பேட் கம்மின்ஸ்

Pat Cummins KKR

கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது மிக அதிக விலைக்கு போன ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிவரும் கம்மின்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 93 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான். இவரின் பந்துவீச்சு திறமையை கொல்கத்தா அணி இழந்துள்ளது பெரிய இழப்புதான்.

4. சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மிட்செல் மார்ஷ்

வெளிநாட்டு வீரர்களை அதிக அளவு நம்பியிருக்கும் ஹைதராபாத் அணி தற்போது ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் ஐ பிறந்துள்ளது நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பங்காற்றிய மிச்செல் மார்ஸ் இந்த முறை ஐபிஎல்-ன் இரண்டாம் பகுதியில் ஐதராபாத் அணிக்காக பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இதுவரை 20 ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்று உள்ள மிச்செல் மார்ஸ் 21 விக்கெட்டுகளையும் 225 ரன்கள் குவித்துள்ளார்.

5. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – ஃபின் ஆலன், குக்லிஜன், ஜாம்ப்பா, பிலிப்பி, கேன் ரிச்சர்ட்சன்

ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தின் போது மிகச் சிறந்த வீரர்களை எடுத்தும் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறைகூட கோப்பை வெல்ல அணி பெங்களூரு அணி. இந்த முறை அந்த வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று பல சிறந்த வீரர்களை கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது இந்த அணி ஏலத்தில் எடுத்தது. தற்போது பல்வேறு காரணங்கள் காரணமாக ஃபின் ஆலன், குக்லிஜன், ஜாம்ப்பா, பிலிப்பி, கேன் ரிச்சர்ட்சன் போன்ற வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அணி நிர்வாகம் கூறிவிட்டது.

இந்த அணிகளை தவிர சென்னை, மும்பை, டெல்லி போன்ற மற்ற அணிகள் எல்லாம் கவலைப் படவேண்டியதில்லை. காரணம் இந்த அனைவரின் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று அந்த அணி நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.