தொடர்ந்து வெடிக்கும் சர்ச்சைகள் ; வைட் பந்திற்கு டி.ஆர்.எஸ் விதி தேவையா ? – டேனியல் வெட்டோரி மற்றும் இம்ரான் தாஹிர் அதிரடி பேச்சு

0
156
Sanju Samson and Nithish Rana DRS for Wide delivery

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி ஆட்டத்தின் இறுதி ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ரானா 37 பந்துகளில் 48* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -
19வது ஓவரில் நடந்த நிகழ்வு

நேற்று ஏறக்குறைய கொல்கத்தா அணி தான் வெற்றி பெறப் போகிறது என்கிற நிலையில் இருந்தது. 19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரில் மொத்தம் மூன்று வைட் பந்துகள் நடுவர் மூலம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக அந்த ஓவரின் 6-வது பந்தை பிரசித் வீச முயற்சிக்கும் முன்னரே நிதிஷ் ரானா சற்று நகர்ந்தார். அவரை பாலோ செய்து அவருக்கு ஏற்றவாறு சாமர்த்தியமாக பந்து வீசினார்.

ஆனால் அந்த பந்து வைட் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விரக்தி அடைந்தார். ஏற்கனவே அந்த ஓவரின் 4வது பந்தில் சஞ்சு சாம்சன் ரிவ்யூ எடுத்திருந்தார். மேலும் இந்தப் பந்துக்கு பிறகு நடுவரிடம் சென்று ஒரு சில வார்த்தைகளை பரிமாறினார்.

வைட் மற்றும் நோபால் ஆகியவற்றுக்கும் இனிய டிஆர்எஸ் பயன்படுத்த வேண்டும்

போட்டியில் நடந்த மேற்கூறிய சம்பவங்கள் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனியல் வெட்டோரி மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் ஒரு சில விஷயங்களை கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

இதுபற்றி பேசிய டேனியல் வெட்டோரி, “கொல்கத்தா அணி வெற்றி பெறப் போகிறது என்று ஒரு பக்கம் இருந்தாலும் போட்டியில் இது போன்ற முக்கிய கட்டங்களில் நடுவரின் தவறான முடிவுகள் முறையானதல்ல. வைட் மட்டுமின்றி நோ பால் குறித்து விஷயங்களிலும் இனி பந்துவீச்சாளர்கள் தாராளமாக ரிவ்யூ எடுக்கலாம். டிஆர்எஸ் கொண்டுவந்த நோக்கமே, தவறான முடிவுகளை மாற்றி அமைப்பதற்காக தான் என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதை வழிமொழிந்து இம்ரான் தாஹிர், “கட்டாயமாக பந்துவீச்சாளர்கள் ரிவ்யூ எடுக்கலாம். ஒரு போட்டியில் பேட்ஸ்மேன்கள் மட்டுமே ரிவ்யூ எடுக்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை. பந்து வீச்சாளர்களும் இனி தாராளமாக இதுபோன்ற தவறான முடிவுகளை மாற்றியமைக்கும் விதத்தில் டிஆர்எஸ் எடுக்கலாம். டெக்னாலஜியை பயன்படுத்தி தவறான முடிவுகளை மாற்றி அமைப்பது எந்த விதத்திலும் தவறில்லை. இனி வரும் போட்டிகளில் நோ பால் மற்றும் வைட் பந்துகள் குறித்து தவறான முடிவு வழங்கப்படும் பட்சத்தில் டிஆர்எஸ் விதிமுறையை பயன்படுத்து தான் சரி என்று கூறியுள்ளார்.