“இவர் போன்ற வீரர்கள் இந்த ஆடுகளத்தை பார்த்தால் ஐபிஎல் விளையாட வர மாட்டார்கள்”- லக்னோ ஆடுகளம் குறித்து கௌதம் கம்பீர் கடுமையான விமர்சனம் !

0
186

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது . இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நாளை மறுதினம் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது .

இந்த இரண்டு அணிகளும் மோதிய முதலாவது டி20 போட்டியிலும் மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது . நேற்று நடைபெற்ற போட்டியிலும் ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவு திரும்பும் வகையில் இருந்தது . இதனைப் பார்த்த வர்ணனையாளர்கள் இது டி20 போட்டி ஒன்று இல்லை . டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது அல்லது ஐந்தாவது நாள் ஆட்டத்தை பார்ப்பது போன்று இருக்கின்றது என விமர்சனம் செய்திருந்தனர் .

- Advertisement -

மேலும் நேற்று நடந்த போட்டியில் இரு அணிகள் தரப்பிலும் ஒரு சிக்ஸர்கள் கூட அடிக்கப்படவில்லை என்பது இந்த ஆடுகளத்தின் தரத்தினை எடுத்துக்காட்டுகிறது . இது தொடர்பாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் வர்ணனையாளர்களும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர். இந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் கௌதம் கம்பீர் .

இது தொடர்பாக வர்ணனையின் போது பேசியுள்ள அவர் ” இது போன்ற ஆடுகளங்களை தயார் செய்தாள் குவின்டன் டீகாக் போன்ற வீரர்கள் ஐபிஎல் விளையாடவே வரமாட்டார்கள் என கடுமையாகச் சாடி இருக்கிறார். டி20 கிரிக்கெட் போட்டியிலும் வந்து வீச்சாளர்களுக்கு உதவி புரியும் வகையில் ஆடுகளங்கள் இருக்க வேண்டியது தான் . அதற்காக இவ்வாறான ஆடுகளங்களை அமைப்பது டி20 கிரிக்கெட் போட்டியின் மீதான சுவாரசியங்களை குறைத்து விடும்” என விமர்சித்துள்ளார் கம்பீர் .

இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இது பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா ” இந்த ஆடுகளத்தின் தன்மையை பார்க்கும்போது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் . மேலும் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே “ஆடுகளத்தின் மையப் பகுதியில் புற்கள் இருந்தன. ஆனால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு முனைகளில் புற்கள் இல்லை.. ஆடுகளத்தை பார்க்கும் போதே இந்த ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவில் திரும்பும் என எதிர்பார்த்தோம் . 120 லிருந்து 130 ரன்கள் அடித்திருந்தால் கூட அது வெற்றி இலக்காக அமைந்திருக்கும்” என தெரிவித்திருந்தார் .

- Advertisement -

இரண்டு அணிகளும் தல ஒரு வெற்றிகளுடன் தொடரானது சமநிலையில் உள்ளது . மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வருகின்ற புதன்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்த மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .