இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.
இந்த சூழ்நிலையில் இரண்டு அணி வீரர்களும் தங்களது கைகளில் கலர் பேட்ஜ் அணிந்தது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் அதற்கான காரணம் வெளிவந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இலங்கை அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொண்டு 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இரண்டு அணி வீரர்கள் கைகளில் கலர் பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். அதாவது பொதுவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அல்லது முக்கிய பிரமுகர் யாராவது இயற்கை எய்தினால் அதனை குறிப்பிடும் விதமாக அன்று நடைபெறும் போட்டியில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் வீரர்கள் கைகளில் கருப்பு நிறத்திலான பேட்ஜ் அணிந்து விளையாடுவது வழக்கம். ஆனால் இது வழக்கத்திற்கு மாறாக இரண்டு அணி வீரர்கள் தங்களது கைகளில் கலர் பேட்ச் அணிந்து விளையாடினர்.
இதற்கான காரணத்தை தற்போது அறிவித்துள்ள பிசிசிஐ “இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ‘உறுப்புகளை தானம் செய்யுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்’ என்கிற விழிப்புணர்வு முயற்சியை தொடங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். விளையாட்டுக்கு ஊக்கம் அளிக்கும் மற்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இருக்கிறது. இந்த முயற்சியின் மூலமாக வாழ்க்கையின் அனைத்து பரிசுகளிலும் ஒரு மிகப்பெரிய பரிசை வழங்குவதற்கு அனைவரும் ஒரு படி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனை ஊக்கப்படுத்தும் விதமாகவே வீரர்கள் கைகளில் பேட்ஜ் அணிந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:55/5 டு 214.. தனியாளாய் போராடி ஆஸி அணியை வீழ்த்திய கேப்டன் அசலங்கா.. இலங்கை அபார வெற்றி
அதாவது உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்யும் விதத்தை ஊக்கமளிக்கும் விதமாக இரண்டு அணி வீரர்களும் இன்று கலர் நிறத்திலான பேட்ச் அணிந்து விளையாடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன்னர் வரை இங்கிலாந்து அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஆவது இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.