இந்திய அணிக்காக ஒரு போட்டியில் மட்டும் விளையாடி காணாமல் போன இந்திய இளம் வீரர்கள்

0
393
Sreenath Aravind and Mayank Markande

இந்தியாவில் கிரிக்கெட்டை விளையாட்டுக்கு கூட விளையாட்டாக பார்ப்பது கிடையாது. அந்த அளவுக்கு கிரிக்கெட் இந்திய மக்களின் இரத்தத்தில் ஊறி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கிரிக்கெட்டை வெறித்தனமாக விரும்பும் மக்கள் தான் இந்திய மக்கள். பல சிறுவர்கள் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி பின்னாளில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று விளையாட தொடங்குவார்கள்.

அதில் பலரது கனவுகள் நிறைவேறும் சிலரது கனவுகள் கனவாகவே கலைந்து போகும். அப்படி கஷ்டப்பட்டு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி அதற்குப் பின்னர் காணாமல் போன ஒரு சில வீரர்களை பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி அதற்குப் பின்னர் காணாமல் போன ஒரு சில கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

ஸ்ரீநாத் அரவிந்த்

உள்ளூர் ஆட்டங்களில் மிக அற்புதமாக விளையாடி அதற்கு பின்னர் ஐபிஎல் தொடரில் ஸ்ரீநாத் அரவிந்த் விளையாட தொடங்கினார் இவரது திறமையை கண்ட பிசிசிஐ இவருக்கு 2015ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பை வழங்கியது. எதிர்பாராதவிதமாக அந்த போட்டியில் விளையாடிய இவர் 3.4 ஓவர்கள் வீசினார். அதில் 44 ரன்கள் ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார்.

எனினும் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த வேளையில் அதற்குப் பின்னர் ஒரு போட்டியில் கூட இவருக்கு விளையாடும் வாய்ப்பை இன்று வரை பிசிசிஐ தரவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

பங்கஜ் தரமணி

1996ஆம் ஆண்டு டைட்டன் முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அந்த முத்தரப்பு தொடர் இந்தியா-தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அந்த தொடரில் இவருக்கு ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர் 8 பந்துகளில் மொத்தமாக 8 ரன்கள் அடித்தார். அதற்குப் பின்னர் ஒரு போட்டியில் கூட இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.

- Advertisement -

மயங்க் மார்கண்டே

மும்பை அணிக்காக விளையாடிய லெக் ஸ்பின்னர் பவுலர் மயங்க் மார்கண்டே. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த வீரர் இவர் 2018-19 ரஞ்சி டிராபியில் இவரது அணிக்காக மிக அதிகம் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் விளங்கினார்.

இவரது திறமை காரணமாக இந்திய அணி இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது. 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்த இவர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனும் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு இன்று வரை வழங்கப்படவில்லை.

ஃபைஸ் பைஸல்

டொமஸ்டிக் லெவல் ஆட்டங்களில் இவர் ஒரு திறமை வாய்ந்த வீரர் என்று பலரும் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல போட்டிகளில் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடக் கூடிய வீரராக இவர் வலம்வந்தார். அதன் காரணமாக இந்தியா இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு ஒருநாள் தொடரில் இவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியது.

களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி 55 ரன்கள் அடித்து இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் அணியில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவன் போன்ற அதிரடி வீரர்கள் இருந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.