முதற்கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாக முடிந்தது-நலமாக இருக்கிறார் பண்ட்!

0
1887

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்  ரிஷப் பண்ட்  சென்ற கார்  நேற்று  ரொக்கிரி அருகில் விபத்திற்கு உள்ளானது . இதில் காயமடைந்த அவரை மீட்டு  அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர் . அவரது உயிருக்கு எந்த ஆபத்து இல்லை என்றாலும்  காயங்கள் பலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் . முதல் கட்ட சிகிச்சைக்கு பின்  உத்தராகண்டில் உள்ள  மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் .

இந்நிலையில்  ரிஷப் பண்டிற்கு நேற்று  மூளை மற்றும்  முதுகு தண்டுவடத்தில்  எம்ஆர்ஐ  ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது . அதில் எந்தவிதமான எலும்பு முறிவுகளோ  மற்றும் ரத்தக் கசிவுகளோ இல்லை என்று  அறிக்கை வந்துள்ளது . ரிஷப் பண்ட் நலமுடன் இருக்கிறார் என்றும்  சில ஆரம்பகட்ட சிகிச்சைகளுக்கு பின்  அவரை டெல்லி அல்லது  மும்பையில் இருக்கக்கூடிய  மருத்துவமனைக்கு  விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார் என்றும்  டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

தற்போது  உத்தராகண்டின் மேக்ஸ் மருத்துவமனையில்  முதற்கட்டமாக அவருக்கு சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை இன்று முடிவடைந்துள்ளது . அவரது நெற்றியில் ஏற்பட்டுள்ள இரண்டு வெட்டு காயங்களுக்கு இந்த பிளாஸ்டிக் சர்ஜரி ஆனது இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது . அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் ரிஷப் பண்ட் நலமாக உள்ளதாக மேக்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .

இது குறித்து பேசி உள்ள அவர் முதற்கட்ட சிகிச்சைகள் நல்லபடியாக நடந்து முடிந்தது ரிஷப் பண்ட் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்தார் . மேலும் ரிசப் பண்ட் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவரது மூட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள தசைனார் சிகிச்சைக்காக டில்லி அல்லது மும்பைக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது . மேக்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழுவுடன் ஆலோசித்த பிசிசிஐ மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்கம் அவரது மேல் சிகிச்சைகளுக்காக அவரை டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல உள்ளது .

இந்த காயத்தில் இருந்து அவர் மீண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவதற்கு குறைந்தது ஒரு வருட கால அளவு தேவைப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன . முதல் கட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் ரிஷப் பண்ட் மிகவும் நலமாக உள்ளதாகவும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்களும் பிசிசிஐயும் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் ரிஷப் பண்ட் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் மேலும் அவரது உடல் நலம் குறித்தும் விசாரித்துள்ளார். ரிஷப் பண்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் . பிஷப் பாண்டியன் மருத்துவ செலவுகள் அனைத்தையும் உத்தரகாண்ட் மாநில அரசே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது