விராட் கோலி சதம் அடிக்கத் தேவையில்லை ; நான் அவரிடம் எதிர்பார்ப்பது இது மட்டுமே – பயிற்சியாளர் டிராவிட் பேச்சு

0
115
Rahul Dravid and Virat Kohli

இந்திய கிரிக்கெட்டின் ரன்மெசின் விராட் கோலியின் பேட்டில் இருந்து கடைசியாகச் சதம் வந்தது 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அதற்குப் பிறகு அவரது பேட்டில் இருந்து அதிக அரைசதங்களே கிடைத்தது. இறுதியாக இந்த வருட ஐ.பி.எல் தொடரில் விராட்கோலியின் பேட்டிங் பார்ம் படுமோசமாகவும் சரிந்துது. இதெல்லாம் இந்திய கிரிக்கெட் வட்டாரம் தாண்டி உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசுப்பொருளாகவே இருக்கிறது!

இந்திய அணி தற்போது இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட ரோகித் சர்மா தலைமையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்று, கடைசி ஒரு டெஸ்டில் விளையாடாமல் ஐ.பி.எல் தொடருக்குச் சென்றது. அப்பொழுது தவறவிட்ட இந்த ஒரு டெஸ்ட்டை தற்பொழுது இந்திய அணி முதலில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் புது கேப்டனாக கொண்டுவரப்பட்டார். இதேபோல் டெஸ்ட் அணிக்குப் புதிய பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லம் கொண்டுவரப்பட்டார். இதற்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அணுகுமுறை மிக அதிரடியாய் இருக்கிறது.

இந்த மாதிரியான சூழலில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் “மக்கள் விராட் கோலியிடம் சதங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர் அந்தளவிற்கு தன் தரத்தை வைத்திருக்கிறார். ஆனால் நான் அவரிடம் இந்திய அணியின் வெற்றிக்கான பங்களிப்பையே எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “சென்ற ஆண்டு ஜோகனஸ்பர்க்கில் அவர் 79 ரன்கள் எடுத்தார். அது மூன்று இலக்க ரன் இல்லைதான். ஆனால் அது அந்த இன்னிங்ஸில் மிக முக்கியமான ரன். இதைப்போன்ற பங்களிப்பைதான் ஒரு பயிற்சியாளர் நான் எதிர்பார்க்கிறேன். விராட் கோலியின் விசயத்தில் மோட்டிவேசன் எல்லாம் தேவையில்லாதது. அவர் முப்பது வயதை தாண்டியிருக்கிறார். ஆனால் நம்ப முடியாத அளவிற்கு, நான் பார்த்ததிலேயே கடின உழைப்பாளியாகவும், தனது கிரிக்கெட் ஆசை, பசி, தன்னை முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் வீரராக இருக்கிறார்” என்று கூறினார்!

- Advertisement -