அன்று ராகுல் டிராவிட் செய்த வரலாற்றுத் தவறை மீண்டும் செய்த பேட் கம்மின்ஸ்!

0
639

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 475 ரன்கள் எடுத்து4 விக்கெட்டுகளை இழந்திருந்தது..

வார்னர் 10 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் சிறப்பாக ஆடிய உஸ்மான் குவாஜா மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். லபுசேன் 79 ரன்களில் ஆட்டம் இழந்த போதும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உஸ்மான் குவாஜா சிறப்பாக ஆடி சதம் அடித்தார் . இவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவன் ஸ்மித் 104 ரண்களில் ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தனது 30வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

தொடர்ந்து ட்ராவிஸ் ஹெட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த உஸ்மான் குவாஜா இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 195 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.ஹெட் 70 ரன்களில் ஆட்டம் இழந்தார். மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக
முழுமையாக கைவிடப்பட்டது̓.இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் தங்கள் ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தார் .

இதனால் உஸ்மான் குவாஜா தனது இரட்டை சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பு துரதிஷ்டவசமாக இழந்தார். குறைந்தபட்சம் ஒரு ஐந்து ஓவர்களாவது ஆடி இருந்தால் கூட அவர் தனது இரட்டை சதத்தை பதிவு செய்திருப்பார் . ஆனால் கேப்டன் போட்டி தூங்குவதற்கு முன்பாகவே டிக்ளர் செய்ததால் அவரால் இரட்டை சதத்தை பதிவு செய்ய முடியவில்லை. கேப்டனின் இந்த முடிவானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது 2004 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களில் ஆடிக் கொண்டிருக்கும்போது அப்போது கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது நம்மால் மறக்க முடியாது. அதேபோன்ற ஒரு முடிவை பேட் கம்மின்ஸ் இன்று எடுத்துள்ளார் . இதனால் உஸ்மான் குவாஜா இரட்டை சதம் வாய்ப்பு பறிபோனது.

- Advertisement -

ஏற்கனவே இந்த டெஸ்ட் போட்டியின் மூன்று நாட்களின் ஆட்டம் முடிவடைந்த நிலையில் போட்டியின் வெற்றிக்காகவே கேப்டன் ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் . இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 149 ரண்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.பேட் கம்மின்ஸ் தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் மூலம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஸ்ஹேசல்வுட் இரண்டு விக்கெட்களையும் நேத்தன் லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் .

உஸ்மான் குவாஜா தனது இரட்டை சதத்திற்கான வாய்ப்பு இழந்தாலும் இன்று காலை டிக்ளர் செய்ததன் மூலம் ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.326 ரன்கள் பின் தங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி நாளை ஃபாலோ ஆன் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் தன்னுடைய முடிவு சரிதான் என நிரூபித்துள்ளார் பேட் கம்மின்ஸ்.