ஆசியக்கோப்பையை பார்க்கவில்லை ஆனால் விராட் கோலி சதம் அடித்தது தெரியும் ; அடுத்த ஒரு வாரம் கோலி எங்களுக்கு பிரச்சினையாக இருப்பார் – பாட் கம்மின்ஸ் பேச்சு!

0
351
Pat Cummins

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை முடித்துக்கொண்டு அடுத்து உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணியோடு செவ்வாய்க்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.

நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியோடு 2-வது சுற்றில் தோற்று வெளியேறினாலும், கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி உடன் துவக்க வீரராக களமிறங்கி 61 பந்துகளில் 122 ரன்களை விராட் கோலி குவித்தது, இந்திய அணிக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் பெரிய ஆசுவாசமாக இருந்தது.

- Advertisement -

விராட் கோலி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சதம் அடிக்காமல் இருந்துவந்தார். மேலும் அவரது பேட்டிங் பார்ம் வழக்கத்தைவிட கொஞ்சம் கீழே சரிந்து இருந்தது. இதனால் அவர் மட்டுமல்லாது இந்திய அணியும் கொஞ்சம் தடுமாறியே வந்தது என்று கூறலாம். இங்கிலாந்து தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு மீண்டும் ஆசிய கோப்பைக்கு திரும்பி வந்த விராட் கோலி தான் இழந்த பழைய பேட்டிங்கை மீட்டுக் கொண்டு வந்தார்.

தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கவிருக்கும் இருபத்தி ஒன்பது வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஆசியக் கோப்பை குறித்தும் அதில் விராட் கோலி அடித்த சதம் குறித்தும் பேசியிருக்கிறார்.

இதுபற்றி பாட் கம்மின்ஸ் கூறும்பொழுது ” முற்றிலும் உண்மையைச் சொல்வதென்றால் நான் ஆசிய கோப்பையில் எந்த ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. இலங்கை அணி கோப்பையை வென்றதாக நினைக்கிறேன். நான் அதில் எதையும் பார்க்கவில்லை ஆனால் விராட் கோலியை பார்த்தேன். அவர் சதம் அடித்தார். அவர் ஒரு கிளாஸ் பிளேயர். அவர் எப்போதாவது தன் பார்முக்கு திரும்பப் போகிறார் என்று தெரியும். அடுத்த ஒரு வாரம் எங்களுக்கு அவர் சவாலாக இருப்பார் ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் நிறைய ஆட்டங்கள் வேறுவேறு வேகத்துடன் விளையாடப்படுகிறது. பவுண்டரி எல்லைகள் பொதுவாக சிறியதாக இருக்கும். நீங்கள் இதற்கு தகுந்தாற்போல் மிக விரைவாக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கும். பந்துவீச்சில் கட்டர் போன்றவை உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். எங்களிடம் உள்ள அணியில் நிறைய வீரர்கள் இந்தியாவில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். எனவே இங்கு எப்படி விளையாட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். டி20 போட்டியில் அந்த நாளில் நீங்கள் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி உங்களுக்கு அது வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் அதிலிருந்து விரைவாக வெளியேறி வரவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.