இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் முதல் போட்டியில் இந்த வீரர்கள் தான் விளையாட போகிறார்கள் – இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் நம்பிக்கை

0
66
Parthiv Patel

உலகக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் வருகிற 23ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. தற்பொழுது இந்திய அணி தன்னுடைய இரண்டு பயிற்சி ஆட்டத்தை விளையாடி முடித்துள்ளது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடியது, இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இன்று பயிற்சி ஆட்டத்தை விளையாடியது. பயிற்சி ஆட்டங்களில் முடிவில் இந்திய அணி நல்ல டச்சில் உள்ளதால் அனைத்து இந்தியர்களும் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

இந்தியா தன்னுடைய முதல் லீக் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக வருகிற 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாட இருக்கிறது. உலக கோப்பை டி20 தொடர் வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 முறை மோதியுள்ளன.ஐந்து முறையும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வெற்றிப்பயணம் நடக்க இருக்கின்ற 2021 உலக கோப்பை டி20 தொடரிலும் தொடர வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் போட்டி மீதான ஆர்வம் இந்திய ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்று பார்த்தீவ் பட்டேல் கணித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்க போகும் இந்திய வீரர்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓபனிங் வீரர்களாக நிச்சயமாக ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் களம் இறங்குவார்கள் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். மூன்றாவது இடத்தில் விராட்கோலி 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி விளையாடுவார்கள். ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாடுவார். ஆறாவது இடத்தில் நிச்சயமாக ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று பார்த்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏழாவது இடத்தில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவார். 8வது இடத்தில் ராகுல் சஹர், ஒன்பதாவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பத்தாவது இடத்தில் ஷமி விளையாடுவார்கள். பதினோராவது வீரருக்கு புவனேஸ்வர் குமார் மற்றும் ஷர்துல் தாகூர் இடையே கடும் போட்டி நிலவும். இவர்கள் இருவரில் ஒருவர் இறுதியில் அணியில் இடம் பெற்று விளையாடுவார்கள் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

உறுதியான பதினோரு வீரர்களை தற்பொழுது அடித்துச் சொல்லி விட முடியாது. எனினும் கேப்டன் விராட் கோலி எந்தெந்த வீரர்களை அந்த போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்று நன்கு தெரிந்து வைத்திருப்பார். நல்ல காம்பினேஷன் உடைய வீரர்களை அந்த போட்டியில் இந்திய அணி சார்பாக களமிறக்குவார் என்று பார்த்தீவ் பட்டெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பார்த்தீவ் பட்டேல் கணித்துள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் :

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (C), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சகர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் அல்லது ஷர்துல் தாகூர்