டி20ல் இளம் துவக்க வீரர்களுக்கான நேரம் வந்துருச்சு; கேஎல் ராகுலுக்கு மாற்று இவர் தான் – வாசிம் ஜாபர் பேட்டி!

0
381

இனி டி20 போட்டிகளில் இந்த இரண்டு இளம் வீரர்கள் தான் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாஷிம் ஜாபர்.

டி20 உலகக் கோப்பை தொடர் முடிவுற்றவுடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று, இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க இளம் பட்டாளத்தை கொண்டு இந்த தொடரில் இந்திய அணி களம் இறங்குகிறது.

- Advertisement -

டி20 உலககோப்பை தொடர் இந்தியாவிற்கு எப்படி மோசமாக அமைந்ததோ! அதேபோல நியூசிலாந்து அணிக்கும் மோசமாக அமைந்திருக்கிறது. இரு அணிகளும் அரை இறுதி சுற்றோடு வெளியேறி இருக்கின்றன.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரையும் கூறி வருவது இன்றளவும் நிற்கவில்லை. இவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு புதிய இளம் வீரர்களை துவக்க வீரர்களை களம் இறக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதேபோன்ற ஒத்த கருத்தை கூறியிருக்கிறார் இந்திய அணையின் முன்னாள் துவக்க வீரர் வாஷிம் ஜாபர்.

“டி20 போட்டிகளில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும். ரிஷப் பன்ட் வழக்கமாக 4 அல்லது 5வது இடத்தில் களமிறங்குவார். ஐபிஎல் போட்டிகளிலும் இதைத்தான் செய்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு துவக்க வீரராக களமிறங்குவது சரியாக இருக்கும். பீல்டிங் உள்ளே இருக்கும் பொழுது எளிதாக தூக்கி அடித்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக மாற்றுவார். மேலும் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் இடதுகை பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். இந்த உலக கோப்பையில் இந்திய துவக்க வீரர்களுக்கு அந்த சிக்கலும் இருந்தது. அது தற்போது இல்லாமல் போய்விடும்.

இளம் வீரர்களாக இருவரும் இருக்கின்றனர். திறம்பட செயல்பட்டு வருவதால், இவர்கள் இருவரும் இன்னும் சில ஆண்டுகள் நிச்சயம் அணியில் நம்பிக்கையாக விளையாடுவார்கள்.” என்றார்.