இந்தியாவை மீட்ட பண்ட் ஸ்ரேயாஸ் ஜோடி – வெற்றியை நோக்கி இந்திய அணி!

0
1913
shreyas iyer rishabh pant

தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  முதல் நாளான நேற்று  பங்களாதேஷ் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது .

இரண்டாம் நாள் ஆட்டமான  இன்று  தனது ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி  ஆரம்பம் முதலில் சற்று தடுமாறியது. கேப்டன் ராகுல்  14 ரங்களிலும்  சுப்மன் கில் 20 ரண்களிலும் ஆட்டம்  இழந்தனர். இதனை அடுத்து  களம் இறங்கிய புஜாரா மற்றும்  விராட் கோலி சிறிது நிலைத்து ஆடினர். அதன் பிறகு அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததால்  உணவு இடைவெளிக்கு முன்பாக இந்திய அணி 94 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து  தடுமாறிக் கொண்டிருந்தது.

- Advertisement -

உணவு இடைவெளிக்குப்பின்  ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட்  மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்  இருவரும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை  கவுண்டர் அட்டாக்கிங்  செய்த ஆடினர் . இதனால் இந்திய அணியின் ஸ்கோர்  வேகமாக உயர்ந்தது. முதல் டெஸ்டிலேயே தனது  அரை சதத்தை தவறவிட்ட  ரிஷப் பண்ட்  இந்த போட்டியில் அதனை நிறைவு செய்தார் .
̓
ஆடுகளம் ஆனது  சுழற்சிக்கு சாதகமாக இருந்த போதிலும்  இருவரும் ஃபுட் வொர்க்கை பயன்படுத்தி பந்தை  திரும்பவிடாமல் லாவகமாக   ஆடினர். இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது .

தேநீர்  இடைவேளையின் போது  இந்திய அணியானது  226  ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது . தற்போது இந்திய அணியானது பங்களாதேஷை விட முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் மட்டுமே பின் தங்கியுள்ளது. கைவசம் ஆறு விக்கெட் மீதமுள்ள நிலையில்  இந்திய  அணி  ஒரு வலுவான  ஸீகோரை  குவிக்கும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

தேனீர் இடைவெளிக்குப் பின் தொடர்ந்த ஆடிய இந்திய அணி தாக்குதல் பாணி ஆட்டத்தையே கடைப்பிடித்தது . இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 93 ரன்களில் ஆட்டம் இழந்தார் . அபாரமாக ஆடிய பண்ட் 105 பந்துகளில் 93 ரன்களை குவித்து இருந்தார் . இதில் 5 சிக்ஸர்களும் 7 பௌண்டரிகளும் அடங்கும் . ஸ்ரேயாஸ் ஐயர் மறுமுனையில் 84 ரன்கள் உடன் அபாரமாக ஆடிக் கொண்டிருக்கிறார் . ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 159 ரன்களை சேர்த்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர் . தற்போது இந்திய அணி 264 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

- Advertisement -