இங்கிலாந்துடன் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்வியால் இந்தியாவுக்கு உருவான வாய்ப்பு! – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

0
871
ICT

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இது டெஸ்ட் போட்டிகளில் ஒரு அற்புதமான வெற்றியாக பார்க்கப்படுகிறது பந்து பீச்சு எந்த வகையிலுமே கை கொடுக்காத ஒரு மைதானத்தில் 343 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி டிக்ளர் செய்தது பென் ஸ்டோக்ஸ் இன் துணிச்சலான கேப்டன்சியை காட்டுகிறது . இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி செல்வதற்கான இந்திய அணியின் வாய்ப்பினை பிரகாசமாக்கி உள்ளது .

இந்த டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது . ஒருவேளை பாகிஸ்தான அணி இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் இறுதிப் போட்டி செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும் ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன . இவர்களுக்கு அடுத்தபடியான வாய்ப்பு தென்னாபிரிக்கா அணிக்கு உள்ளது .

இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது அந்த இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அவர்கள் ஆஸ்திரேலிய அணியுடன் ஆன நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது .

ஆஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்தத் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் உறுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு தகுதி பெறுவார்கள் . இந்த இறுதி ஆட்டமானது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் வைத்து நடைபெறும் .

இங்கிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பாகிஸ்தான அணி உலக டெஸ்ட் சாம்பியன் புள்ளிகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இதனால் அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன .