21 வயதான பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஹஸ்னைன் பந்து வீச தடை விதித்ததுள்ள ஐசிசி

0
1176
Mohammad Hasnain

இருபத்தி ஒரு வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஹஸ்னைன் இதுவரை 26 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார். மிகத் துல்லியமாக பந்து வீசி கொண்டு இருந்த அவர் தற்போது சோதனையில் பவுலிங் விதிமுறையை மீறுவதாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் அவர் சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப் பட்டுள்ளார்.

முழங்கை நீட்டிப்பு விதிமுறையை மீறும் முகம்மது ஹஸ்னைன்

ஐசிசியின் விதிமுறைப்படி ஒரு வேகப்பந்து வீச்சாளர் தன்னுடைய முழங்கையை 15 டிகிரி அளவிற்கு தான் நீட்டித்துக் கொள்ள வேண்டும். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் முகம்மது ஹஸ்னைன் அந்த 15 டிகிரி அளவை மீறி பந்து வீசுவதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

ஐசிசியின் விதிமுறையை மீறி பந்து வீசும் காரணத்தினால் அவர் சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப் பட்டுள்ளார்.முகம்மது ஹஸ்னைன் மீண்டும் தன் பந்து வீச்சை மறு பரிசோதனையில் நிரூபித்த பின்னர் மட்டுமே, அவரால் சர்வதேச போட்டிகளில் முன்பு போல் விளையாட முடியும்.

பவுலிங் ஆலோசகரை நியமித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்

முகம்மது ஹஸ்னைன் தடை விதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரு சிறந்த பவுலிங் ஆலோசகரை அவருக்கென தனியாக நியமித்து அவருடைய பந்துவீச்சை சீர்திருத்த போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதற்கான முறையான பயிற்சியை முகம்மது ஹஸ்னைன் இந்த இடைப்பட்ட நாட்களில் எடுத்துக் கொள்வார் என்றும் கூறியுள்ளது.

கூடிய விரைவில் தன்னுடைய பந்துவீச்சை சரி செய்து கொண்ட பின்னர் மறு பரிசோதனையில் தன் பந்துவீச்சை நிரூபித்து மீண்டும் சர்வதேச அளவில் அவர் களமிறங்குவார் என்று பாகிஸ்தான் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.