பாகிஸ்தான் அணி தயார்; ஆனால் இந்திய அணி…? – ஸ்காட் ஸ்டைரிஸ் விளக்கம்!

0
96
Scott styris

இந்திய அணி வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டில், துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணியோடு ஆசிய கோப்பை தொடரில் மோதுகின்றது. உலகம் தழுவி கிரிக்கெட் ரசிகர்களிடையே தற்போது இதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது!

இதற்கு முன்பு இரு அணிகளும் டி 20 உலக கோப்பையில் இதே மைதானத்தில் மோதி இருந்தன. இந்தப்போட்டியில் ஷாகின் ஷா அப்ரிடியின் சிறப்பான பந்துவீச்சால் மற்றும் பாபர் ஆசம், முஹம்மது ரிஸ்வான் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி கடைசியாக இந்திய அணியை மிகச்சிறப்பாக வென்று இருந்த காரணத்தால் உளவியல் ரீதியாக மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி கடந்த ஓராண்டாக சுய பரிசோதனையில் ஈடுபட்டு பல பரீட்சார்ந்த முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தாக்குதல் பாணி ஆட்டத்தை ஆட மனநிலையை வளர்த்துக் கொண்டு, ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணியும் தலைமையில் வெகு சிறப்பாக தயாராகி வந்திருக்கிறது.

நம்பிக்கையோடு இருக்கும் பாகிஸ்தான் அணிக்கும், புதிய முறையில் தயாராகி இருக்கும் இந்திய அணிக்கும் நடைபெற இருக்கும் இந்தப் போட்டி நிச்சயம் கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான ஒரு போட்டிதான். மேலும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் ஆட விருக்கும் டி20 உலகக் கோப்பையின் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் தொடர் ஆசிய அணிகள் டி20 போட்டிகளில் எவ்வாறு இருக்கின்றன என்று மற்ற அணிகள் தெரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்த நிலையில் இரு அணிகளை பற்றியும் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன ஸ்காட் ஸ்டைரிஸ் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது ” பாகிஸ்தான் அணி தனது டாப் ஆர்டர் பற்றி எப்பொழுதும் கவனத்தோடு இருக்க வேண்டும். இதில் வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் எளிதில் கணிக்கக் கூடிய அணியாக இருக்கிறார்கள் என்று கூறலாம். அவர்கள் ஆட்டத்தில் ஒரு கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களை எளிதில் கணிக்க முடிகிறது. அதே சமயத்தில் இந்திய அணி தான் எப்படி ஆட்டத்தை அணுகுவது என்று இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன் ” இன்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பாகிஸ்தான் அணியின் பலம் டாப் பார்டர் பேட்ஸ்மேன்கள் தான். அவர்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்கும் திட்டத்தோடு இருப்பார்கள். இந்திய அணி அதற்கு இடம் தராமல் தொடக்க வீரர்களை வீழ்த்தினார், பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் அவர்கள் விரும்பாத ஒரு வேலையைச் செய்ய வேண்டியதாய் இருக்கும். இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையும். இந்த முறை இந்திய அணியால் இதை செய்யமுடியும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்!