பாகிஸ்தான் இந்தியாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

0
7323
Kaneria

இந்த வருட கிரிக்கெட்டை உள்நாட்டில் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்கள் என இலங்கை அணி உடன் வெற்றியோடு ஆரம்பித்தது!

இதற்கு அடுத்து மீண்டும் உள்நாட்டில் நியூசிலாந்து அணி உடன் தலா மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் இந்திய அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரை முதல் இரண்டு போட்டிகளில் வென்று கைப்பற்றி உள்ளது. நேற்று முடிந்த இரண்டாவது போட்டியில் 108 ரண்களுக்கு நியூசிலாந்து அணியை சுருட்டி 20 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனியரியா இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்துடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக சாடி உள்ளார்.

அவர் பேசும் பொழுது ” விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாத டி20 அணியை இனி ஹர்திக் பாண்டியா பார்த்துக் கொள்வார் என்று இந்தியா தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் நாங்களோ பாபர் ஆசமுடன் எல்லா வடிவங்களிலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம். எங்கள் அணிகளை நாங்கள் மாற்றிக் கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் வீரர்கள்தான். வீரர்களை கை விடுவதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். இப்படி பயம் உள்ளே நுழைந்த உடன் அணி வீழ்ச்சி அடைய தொடங்குகிறது. நீங்கள் ஒரு போட்டியான அணியை உருவாக்க விரும்பினால்; நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசி உள்ள அவர்
” மகேந்திர சிங் தோனி அவரது டி20 உலக கோப்பையில் இளமையான ஒரு அணியை கொண்டு இருந்தார். அவர் நல்ல பீல்டிங் பக்கத்தை பெற்றார். மூத்த வீரர்களுக்கு பதிலாக பேட்டிங்கில் 15 முதல் 20 ரன்கள் எடுக்கக்கூடிய, ஃபீல்டிங்கில் 10 முதல் 20 ரன்கள் தடுக்கக்கூடிய இளம் வீரர்களை அவர் விரும்பினார். இது உங்களுக்கு மிகவும் தேவையான சிந்தனை. ஆனால் நாங்கள் இதைக் கற்றுக் கொள்ளவில்லை மேலும் பின்தங்கி சென்று மூத்த வீரர்களை காப்பாற்றுவதிலேயே குறிக்கோளாய் இருக்கிறோம்” என்று தாக்கியுள்ளார்.

இந்தியாவின் ஆட்ட அணுகுமுறை குறித்து பேசிய அவர் ” கில் மற்றும் இஷான் இருவரும் அச்சமற்ற விளையாட்டை விளையாடுகிறார்கள். எதிரணியை 108 ரண்களுக்கு மடக்கி அதை வெறும் இருபது ஓவர்களில் எட்டிப் பிடித்து அசத்தினார்கள். எங்களைப் போல் தனிப்பட்ட வீரர்களின் ரன்களுக்காக அவர்கள் ஆட்டத்தை இழுக்கவில்லை. நீங்கள் எதிர் தரப்பை அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் இந்தியா அதைத்தான் செய்தது” என்று தெளிவுபடுத்தி உள்ளார்!