ஸ்பீடோமீட்டர் சரியாக வேலை செய்யவில்லை ; உண்மையாக நான் 164 கி.மீ வேகத்தில் பந்து வீசினேன் – பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது சமி

0
2291
Mohammad Sami Pakistan

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்துவிட முடியாது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை 160 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் பந்து வீசியிருக்கிறார். பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும், 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 121 விக்கெட்டுகளையும், 13 டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருக்கிறார்.

தான் விளையாடிய பொழுது பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளின் வேகத்தை துள்ளியமாக கணித்து கூறக்கூடிய ஸ்பீடோ மீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. அதன் காரணமாகவே தான் வீசிய உண்மையான வேகம் அனைவருக்கும் தெரியாமல் போனது என்று கூறியுள்ளார்.

- Advertisement -
ஸ்பீடோமீட்டர் சரியாக வேலை செய்யவில்லை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இது நாள் வரையில் வேகமாக பந்து வீசிய பந்து வீச்சாளராக பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் வலம் வந்து கொண்டிருக்கிறார். 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வீசிய பந்து தான் தற்பொழுது வரை ஒரு பந்து வீச்சாளர் அதிவேகமாக வீசப்பட்ட பந்தாக தற்போது வரை உள்ளது. அதி வேகமாக வீசிய பந்து வீச்சாளர் என்கிற கின்னஸ் சாதனைக்கும் அவரே சொந்தக்காரராக தற்போது வரை நீடித்து வருகிறார்.

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி 2 முறை 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். ஆனால் உண்மையில் நான் 164 மற்றும் 162 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறேன். பந்துவீச்சாளர் வீசும் வேகத்தை கண்காணிக்கக் கூடிய ஸ்பீடோமீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. ஐசிசி தரப்பிலிருந்து கூட இது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்று வெளியானது.

ஸ்பீடோமீட்டர் சரியாக வேலை செய்யவில்லை அதனால் வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை என்று அவர்கள் ஒரு சமயத்தில் கூறினார்கள். அதன் காரணமாகவே நான் வீசிய அந்த 164 மற்றும் 162 கிலோமீட்டர் வேகம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போனது என்று தற்பொழுது முகமது சமி கூறியுள்ளார்.

- Advertisement -

2016 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில்,இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முகமது சமி சிறப்பாக பந்து வீசினார். அந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் விக்கெட்டுகளை சாமர்த்தியமாக கைப்பற்றினார். சர்வதேச அளவில் அந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் முகமது சமி எந்தவித போட்டியிலும் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.