“பாகிஸ்தான் வெயிட்டா இருக்கு. இந்தியாவுக்கு இந்த விஷயம் கஷ்டம்” – கவுதம் காம்பீர் ஓபன் டாக்!

0
476
Gambhir

நாளை மழை வழிவிட்டால் நடந்து கொண்டிருக்கும் எட்டாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகப்பெரிய போட்டி நடந்தேறும்!

போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக மழை வாய்ப்பு 90 சதவீதம் என்று கூறப்பட்டது. தற்போது மழை வாய்ப்பு 70 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது இன்னும் குறைந்தால் போட்டி குறைந்த ஓவர் கொண்டதாகவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

குறைந்த ஓவர் போட்டி என்றால் நிச்சயம் இந்திய அணியில் 6வது பந்துவீச்சாளர் இருப்பது வாய்ப்பு மிகவும் குறைவு. மேலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதால் இரண்டாவது பேட் செய்வது நல்லது. இதற்கு டாஸ் வெல்ல வேண்டியது கட்டாயம்.

நாளைய போட்டியில் இந்திய அணி எப்படி அமைக்கப்படும்? அஸ்வின், முகமது சமி, ரிஷப் பண்ட் இவர்களில் யாராவது அணியில் இருப்பார்களா? என்பது குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் போட்டி நாள் மிகவும் நெருங்கி விட்ட நிலையில் போட்டி குறித்த கணிப்புகளும் விவாதங்களும் பெரிய அளவில் இந்த கொண்டு இருக்கின்றன.

இந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் தனது பார்வையில் அலசி கூறியிருக்கிறார்.

- Advertisement -

கவுதம் கம்பீர் கூறும் பொழுது
“இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளில் சிறந்த பந்து வீச்சாளர்களை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை. ஆஸ்திரேலியாவை பார்த்தால் அவர்களிடம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீச ஒரு வேகப்பந்து வீச்சாளர்தான் இருக்கின்றார். இங்கிலாந்து அணிக்கு மார்க் உட் மட்டுமே இருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அணியில் சாகின், ஹாரிஸ், நதிம் ஆகிய மூன்று பந்துவீச்சாளர்கள் மிக வேகமாக வீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான்” என்று கூறியுள்ளார்…

மேலும் பேசிய அவர் ” பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் பலமாக இருந்தாலும் பேட்டிங் வரிசையில் அவர்கள் பலவீனமாக உள்ளார்கள். துவக்க ஆட்டக்காரர்கள் விரைவாக வெளியேறி விட்டால் அவர்கள் மிகுந்த தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். இந்திய அணி அவர்களது பேட்டிங் நடு வரிசையை தாக்கும். மேலும் இவர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாற கூடியவர்கள். இந்திய அணியின் பலவீனம் என்று பார்த்தால் இந்திய அணியில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீச முகமது சமி தவிர வேறு யாருமில்லை. இந்திய அணியின் பலவீனம் இது. இந்திய அணியின் பலம் அவர்களது பேட்டிங் வரிசை ” என்று கூறியுள்ளார்!